தலீபான்களுக்கு சீனா சொன்ன அதிரடி தகவல்! ஏற்குமா என எதிர்பார்ப்பு?

Photo of author

By Hasini

தலீபான்களுக்கு சீனா சொன்ன அதிரடி தகவல்! ஏற்குமா என எதிர்பார்ப்பு?

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் அங்கு தலிபான்கள் முன்னேறி வந்தனர். அதிலும் தலிபான்களுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றினர்.இந்நிலையில் தலைநகர் காபூலிலையும் நேற்று கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தலீபான்களுக்கும், ஆப்கன் படைகளுக்கும் இடையே தாக்குதல் நடத்திய நிலையில், தலீபான்கள் வெற்றி அடைந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிபர் அஷ்ரப் கனி நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனை தொடர்ந்து ஆஃப்கானிஸ்தானில் அசாதாரண சூழல் நிலவுகிறது. அமெரிக்க தூதரகங்களை மூடி விட்டு வெளியேற அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் அங்கு பல்வேறு வகையில் மக்கள் பயந்து நாட்டை விட்டு வெளியேற முடியாமல் திணறி வருகின்றனர்.

பெண்கள் உட்பட பலரும் மிகுந்த வருத்தங்களை தெரிவித்து உள்ளனர். பலரும் உயிர் பயத்தில் நாட்டை விட்டு வெளியேறினால் போதும் என்று விமான நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளனர். இந்நிலையில் அங்கே ஏற்பட்ட துப்பாக்கி சூடு நடந்துள்ளதும் குறிப்பிடத் தகுந்தது. இந்நிலையில், நட்பு ரீதியிலான உறவுகளை மேம்படுத்த தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. ஏற்கனவே தலிபான்களை அங்கீகரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.