ரஷ்யாவுடன் கூட்டு சேரும் சீனா! உக்ரனை ஆக்கிரமிக்க அடுத்தகட்ட திட்டம்!
உக்ரைன் ரஷ்யா கிடையே 18 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.ரஷ்யாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் அதன் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.அவர்கள் எதிர்ப்பை கூறும் வகையில் முதலில் ஏற்றுமதி இறக்குமதி வணிக சேவையை நிறுத்தினர்.மேலும் சில நாடுகளின் உணவு நிறுவனங்களில் அங்கு செயல்படுவதை நிறுத்தியுள்ளனர்.அமெரிக்காவும் தங்கள் வங்கி செயல்பாடுகளை ரஷ்யாவில் ரத்து செய்துள்ளது.இவ்வாறு அனைத்து நாடுகளும் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதை எதிர்த்து வருகிறது.
இவ்வாறு இருக்கையில் சீனா மட்டும் தற்போது வரை தங்கள் எதிர்ப்பை கூறாமல் உள்ளது.இவ்வாறு இருக்கையில் உக்ரைன் மீது தீவிரமாக போர் தொடுக்க சீனாவிடம் ரஷ்யா இராணுவ உபகரணங்கள் வழங்குமாறு உதவி கோரியாதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து வாஷிங்டனில் இருக்கும் சீனா தூதரக செய்தியாளர் கூறியது,ரஷ்யாவிற்கு சீனா உதவுகிறது என எந்த தகவலையும் நான் வெளியிடவில்லை என கூறியிருந்தார்.
மறுபுறம் அமெரிக்கா தேசிய பாதுகப்பு ஆலோசகர் இன்று சீனா சீனாவின் உயர்மட்ட அதிகாரியை சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.மேலும் ரஷ்யா சீனாவிடம் கேட்ட இராணுவ உபகரணங்கள் கோரிக்கைக்கு தற்போது வரை சீனா எந்தவித ஒப்புதளையும் தரவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.ரஷ்யாவின் தாக்குதலுக்கு தற்போது வரை சீனா எந்தவித எதிர்ப்பையும் கூறாமல் மெளனம் காத்து வருகிறது.இவ்வாறு இருப்பது இரு நாடுகளும் கூட்டு சேரப்போவதை தெரிவிப்பதாக கூறுகின்றனர்.மேலும் இன்று ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
இதற்கு முன் பலமுறை நேரடி பேச்சுவார்த்தை நடத்த இருந்த போதிலும் ரஷ்யா அதிபர் புதின் தொடர்ந்து நிராகரித்தே வந்தார்.தற்பொழுது இரு நாடுகளும் போரை நிறுத்த வேண்டும் என அனைத்து நாடுகளும் எதிர்பார்த்து வருகிறது.அந்தவகையில் இன்று காலை பத்து மணியளவில் காணொளி வாயிலாக இரு நாட்டிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.மேலும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறும் என உக்ரைன் உயர்மட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.