இந்தியாவில் வெங்காயம் போல் சீனாவில் விலையேறியது என்ன தெரியுமா?

0
182

இந்தியாவில் வெங்காயம் போல் சீனாவில் விலையேறியது என்ன தெரியுமா?

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரூபாய் 20 ஆக இருந்த ஒரு கிலோ வெங்காயம் இன்று ஏதோ ஒரு கிலோ ரூபாய் 100க்கு மேல் தாண்டி விட்டது. வெங்காயத்தின் விலை இன்னும் உயரும் என்று வெங்காய மொத்த வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்

இதனால் வெங்காயத்தின் பயன்பாடு இந்தியா முழுவதும் குறைந்து விட்டதாகக் கருதப்படுகிறது. ஓட்டலில் வெங்காய தோசை இல்லை என்றும், பிரியாணிக்கு தயிர் வெங்காயம் இல்லை என்றும் பல கடைகளில் கூறிவருவதை காண முடிகிறது

இந்த நிலையில் இந்தியாவில் வெங்காய விலை ஏறி வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டது போல் சீனாவில் பன்றிக்கறி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பறவைக்காய்ச்சல் நோய் அந்நாட்டில் பரவி வருவதை அடுத்து ஏராளமான பன்றிகளை அந்நாட்டு அரசு கொன்று குவித்தது. இதன் விளைவாக தற்போது பன்றிக்கறி விலை பலமடங்கு ஏறி விட்டதாக அந்நாட்டிலிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இதேபோல் துருக்கி மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தின் தென் பகுதியில் உள்ள நாடுகளிலும் அத்தியாவசியமான உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் பொருளாதாரம் சரிந்து வருவதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Previous articleபிரபல ரவுடியை பிடிக்க பெண் எஸ்.ஐ. செய்த தந்திரம்
Next articleடேவிட் வார்னர் முச்சதம் ஆனந்தக்கண்ணீர் விட்டது யார் தெரியுமா?