இரட்டைக் குழந்தைகளுக்கு தாய் ஆன சின்மயி! வாடகை தாயா என கேட்ட ரசிகர்கள்!
பிரபல பாடகியான சின்மயி ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாடி அறிமுகமானவர். முதல் பாடல் சூப்பர் ஹிட் பாடல் இன்றளவும் பலரின் பேவரட் பாடலாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து எனக்கும் உனக்கும் ,பாய்ஸ், அறிந்தும் அறியாமலும் ,சண்டைக்கோழி, சிவாஜி, எந்திரன், வின்னைத்தாண்டி வருவாயா என தமிழ் சினிமாவின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். இவர் ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு எட்டு ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது. இப்போது சின்மயிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.
எனது கர்ப்ப காலம் முழுவதும் நிறைய பேர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற பக்கத்தில் எனக்கு குழந்தை இல்லாதது குறித்து நான் பெண்ணாக முழுமையாடையவில்லை என்றும் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். இன்று குழந்தை பிறந்த பின்னர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர் எனவும் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.. காரணம் நான் மற்றவர்களைப் போல கர்ப்பகாலத்தில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட தான் எனவும் கூறினார். எனுடை குடும்பம், நண்பர்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.