சோ கூறிய அறிவுரை!! கண்ணதாசன் ஏற்றாரா? புறக்கணித்தாரா?

Photo of author

By Gayathri

கவிஞர் கண்ணதாசன் 70களில் மாபெரும் பாடகர். அவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் அர்த்தம் நிறைந்ததாகவும், வாழ்க்கை தத்துவம் புதைந்துள்ளதாகவும் அமைந்துள்ளது. அவரின் அர்த்தமுள்ள பாடல் வரிகள் பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையை கூட அடுத்த கட்ட நடவடிக்கைக்கு கொண்டு செல்ல உத்வேகமாக அமையும். நடிப்பின் மீது இருந்த நாட்டம் காரணமாக இவர் இளம் வயதிலேயே சென்னைக்கு வந்துள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளோ வசனம் எழுதுவது.

அதில் கவிஞர் வல்லமை படைத்தவர் அல்லவா. இவர் எழுதிய வசனங்கள் நிறைந்த படம் அன்றைய கால கட்டங்களில் மிகப்பெரிய வெற்றியை கண்டிருந்தது. முதன்முதலாக “கலங்காதிரு மனமே” பாடலை ‘கன்னியின் காதலன்’ என்ற திரைப்படத்திற்காக இவர் இயற்றியுள்ளார். அன்றளவு அது பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இவருக்கு விரும்பிய நடிகர் துறையிலும் தலைவர் பின்னி எடுத்துவிட்டுள்ளார். சுமார் 4500 பாடலுக்கு மேல் பாடியுள்ளவர். இவர் இறக்கும் முன்னரே இவருடைய இரங்கற்பாவை பாடியுள்ள ஒரே பாடகர் இவரே. மேலும் ஆறு படங்களை தயாரித்திருக்கிறார்.

கண்ணதாசன் பல படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். இவருடைய எழுத்துக்கள் இன்றளவும் அவர் பெயர் சொல்லும் வகையில் கவரக்கூடியவை. சூழலுக்கு ஏற்றவாறு கன நிமிடத்தில் வசனம் எழுதி விடுவாராம்!! மேலும் ஒரு சூழ்நிலை கூறினால் போதும் அதிகபட்சமாக 30 நிமிடங்களில் தலைவர் பாடல் இயற்றிவிடுவார். சினிமா துறையைத் தாண்டி பல நூல்களை இயற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது ஏழு பத்திரிக்கை துறைகளின் ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். இந்த மொத்த சாதனையையும் தனது 54 வயதுக்குள் பூர்த்தி செய்துள்ளவர். அவர் கடைசியாக இயற்றிய பாடல் கண்ணே கலைமானே என்ற பாடல். இன்றைய பொழுதிலும், இதைக் கேட்டால் மனம் உருகும்.

அன்றைய காலகட்டங்களில் ஒரு வருடத்திற்கு வெளியாகும் பாடல்களில் அதிகபட்ச பாடல்கள் இவரின் வரிகளால் உயிர் பெற்றுள்ளது. இப்படிப்பட்ட கலைஞனுக்கு 1977 ஆம் ஆண்டு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டிருந்ததாம். உடனே தனது நெருங்கி நண்பர் சோ அவர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு சோவோ, நான் கூறுகிறேன் என்று தப்பா நினைக்காதீர்கள். இந்த விருது 15 வருடங்களாக வழங்கப்பட்டு வருகின்றது. தங்களைப் போன்ற பெரும் கவிஞருக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே இவ்விருது கொடுத்தாயிருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள், கோட்டோ சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் கொடுத்துவிட்டு கடைசியில் உம்மை அழைப்பது நியாயமா? இப்பொழுது நீங்கள் வாங்கி விட்டீர்கள் என்றால் அந்த விருதுக்கு தான் பெருமையை தவிர உங்களுக்கு கிடையாது! என்ற உண்மையை சிறிதும் தயக்கம் காட்டாது வெளிப்படையாக கூறியுள்ளார் சோ. அவருடைய பேச்சுக்கு கண்ணதாசன் மறு பேச்சு பேசியதே கிடையாது! அவர் கூறியது போலவே, கண்ணதாசன் அந்த வருட கலைமாமணி விருதை புறக்கணித்துள்ளார். நண்பன் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று அவர்களின் இடையே உள்ள நட்பை இன்றளவும் பெரியவர்கள் பேசி கேட்பவர்கள் உண்டு.