என்னை அடித்தே கொல்வதாக இயக்குனர் மிரட்டினர்.. அதனால் தான் சூரியவம்சம் படத்தில் பேரனாக நடிக்க முடியவில்லை!!

Photo of author

By Gayathri

என்னை அடித்தே கொல்வதாக இயக்குனர் மிரட்டினர்.. அதனால் தான் சூரியவம்சம் படத்தில் பேரனாக நடிக்க முடியவில்லை!!

Gayathri

Updated on:

1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சூரியவம்சம். இதில் சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவண்ணன், பிரியா ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விக்ரமன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வெளியாகி 25 வருடங்களைக் கடந்திருந்தாலும் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. படத்தைப் போலவே பாடல் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

சூரியவம்சம் படப்பிடிப்பின் போது தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்தள்ளார் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அவர்கள். எனக்கு ஐந்து வயது இருக்கும் பொழுது நான் இப்படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், அப்பொழுது அவருக்கு எந்தவித முன்ன அனுபவமும் கிடையாது. தன்னுடைய சிறுவயதில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற இவர் இயக்குனரிடம் எந்த ஏங்கிளில் கேமராவை வைக்கப் போகிறீர்கள் என்று கேட்டு விட்டாராம். இதனால் கோபமடைந்த இயக்குனர் இவனை இங்கிருந்து கூட்டி சென்று விடுங்கள் இல்லையென்றால் அடித்துக் கொன்று விடுவேன் என கோபமாக கூறியுள்ளார்.

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அவர்கள் தன்னுடைய சிறுவயதில் நடந்த மறக்க முடியாத கசப்பான நினைவாக இதனை குறிப்பிடுகிறார்.