கிறிஸ்துவர்களுக்கே தெரியாத உண்மை! இயேசுவின் பிறப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்!
உலக முழுவதிலும் உள்ள கிறிஸ்துவர்கள் இணைந்து கொண்டாடும் பண்டிகை என்றாலே அது கிறிஸ்துமஸ் தான்.டிசம்பர் மாதம் முதலில் இருந்தே நமக்கு நினைவில் வந்து அதற்காக தயாராகும் பண்டிகைகளில் ஒன்றாக இருப்பதும் கிறிஸ்துமஸ் என அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றியும் இயேசு பிறப்பு பற்றியும் இந்த பதிவின் மூலம் காணலாம்.
ரோம அரசின் எல்லைக்குள் அடங்கிய வட இஸ்ரவேல் பகுதியிலுள்ள நாசரேத் என்னும் ஒரு பெண் இருந்தார்.அவருக்கு திருமண வயது வந்த பிறகு அந்த ஊரில் தச்சு தொழில் செய்யும் யோசேப்பு என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.அந்நிலையில் ஒரு நாள் காபிரயேல் என்னும் தேவதூதன் வெளிப்பட்டு மரியாளே நீ கர்ப்பம் அடைந்தால் உனக்கு ஒரு குமாரன் பிறப்பான் அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக என்று சொல்லி மறைந்தார்.
மேலும் ரோம அரசனான அகஸ்துராயன் தான் உலகம் முழுவதும் முதலாம் குடிமதிப்பு எழுதப்படவேண்டும் என கட்டளையிட்டவர்.அவரவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர்.அப்போது யோசேப்பு,தாவீதுராஜவின் வம்ச வழியில் வந்தவர தாவீதுராஜ பிறந்த ஊர் பெத்லகேமுக்கு தன்னுடைய மனைவி மேரியை அழைத்து செல்லும் நிலை இருந்தது.
அப்போது மேரி அவர்கள் கர்ப்பமாக இருந்தார்.அதனால் நீண்ட பயணத்திற்கு பயன்படுத்தப்படும் கழுதை மூலமாக தொலை தூரம் பயணம் செய்தனர்.பெத்லகேமை அடைந்ததும் தங்குவதற்கு இடம் தேடினார்கள்,ஆனால் எங்கு தேடியும் இடம் கிடைக்கவில்லை.அப்போது மாட்டு தொழுவத்தில் மட்டுமே தங்குவதற்கு இடம் கிடைத்தது.
அதனால் அவர்கள் இருவரும் மாட்டு தொழுவத்திலேயே அன்று இரவு தங்கினார்கள். அப்போது அந்த மாட்டு தொழுவத்திலேயே மேரிக்கு குழந்தை பிறந்தது.அந்த குழந்தையை தான் இயேசு என உலகம் முழுவதிலும் உள்ள கிறுஸ்துவர்கள் கொண்டாடி வருகின்றனர்.