குழந்தைகளுக்கு இருக்கும் நாள்பட்ட இருமல்!! இதை குணப்படுத்த இந்த பொருட்களை பயன்படுத்துங்க!!

0
42
Chronic cough in children!! Use these products to cure it!!
Chronic cough in children!! Use these products to cure it!!

குழந்தைகளுக்கு இருக்கும் நாள்பட்ட இருமல்!! இதை குணப்படுத்த இந்த பொருட்களை பயன்படுத்துங்க!!

நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இருக்கும் நாள்பட்ட இருமல் குணப்படுத்த ஒரு சில பக்கங்களை வைத்து மருந்து எவ்வாறு தயாரிப்பது எவ்வாறு குழந்தைகளுக்கு கொடுத்து இருமலை குணப்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தற்போதைய காலத்தில் குழந்தைகளுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை இருமல் நோய் ஆகும். குழந்தைகளின் உடலில் இருக்கும் அதிகப்படியான உடல் சூடு, தொண்டை அழற்சி போன்றவற்றால் இருமல் ஏற்படும்.குழந்தைகளுக்கு ஜலதோஷ இருமல், நாள்பட்ட இருமல், வறட்டு இருமல், கப இருமல் போன்று பல வகையான இருமல்கள் குழந்தைகளுக்கு ஏற்படும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த இருமலை ஆரம்ப நாட்களில் கண்டறிந்து சரியான மருந்தை கொடுப்பதன் மூலமாக இதை குணப்படுத்தலாம்.தற்பொழுது குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமல் குணப்படுத்த தயார் செய்யப்படும் மருந்து பற்றி பார்க்கலாம்.

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்:

* துளசி

* கண்டங்கத்தரி

* சுக்கு

* தூதுவளை

* தேன்

தயார் செய்யும் முறை:

அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் 1கப் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பின்னர் துளசி, தூதுவளை, சுக்கு, கண்டங்கத்தரி இவற்றை அந்த பாத்திரத்தில் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.ஒரு கப் தண்ணீர் கால் கப் தண்ணீராக வரும் வரை காய்ச்ச வேண்டும்.

பிறகு இதை இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை அரை அவுன்சு எடுத்து அதில் 5 சொட்டு தேன் சேர்த்து இதை குழந்தைகளுக்கு தினமும் இரண்டு வேலை கொடுக்க வேண்டும்.இவ்வாறு கொடுக்கும் பொழுது இருமல் விரைவில் குணமாகும்.