நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்! விமானியின் செயலால் நடைபெற்ற விபரீதம் 66 பேர் பலியான சோகம்!

0
133

பாரிஸிலிருந்து கெய்ரோ நோக்கி எகிப்து நாட்டு விமானம் ஒன்று புறப்பட்டு வானில் சென்று கொண்டிருந்தது. நடுவானில் பாதி தூரம் சென்ற அந்த விமானம் கடலில் மேல் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது.

ஆகவே இந்த விமானம் எங்கு சென்றது? என்ன ஆனது? என தெரியாமல் இருந்து வந்தது. அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 66 பேரும் பலியானார்கள்.

கிரீஸ் அருகே கடலில் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. விபத்து நடைபெற்றபோது தீவிரவாத தாக்குதலால் விபத்து ஏற்பட்டதாக எகிப்து அதிகாரிகள் கூறினார்கள்.

இந்த விபத்து கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்றிருக்கிறது. விபத்து நடைபெற்ற சுமார்6 வருடங்கள் ஆன நிலையில் தற்போது இந்த விமானம் விபத்துக்குள்ளானதற்கான உண்மையான காரணம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது, இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரான்ஸ் நாட்டு விமான போக்குவரத்து நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கையில் எகிப்து விமானத்தின் விமானி சிகரெட் பிடித்ததால் விபத்து உண்டானது, விமானிகள் அறையில் இந்த விமானத்தின் விமானி ஒருவர் சிகரெட் பற்ற வைப்பதற்காக லைட்டரை பற்ற வைத்திருக்கிறார்.

அப்போது விமானத்திலிருந்த அவசர முகத்துவாரத்திலிருந்து ஆக்சிஜன் கசிந்தது. இதன் காரணமாக, உண்டான தீப்பொறியை விமானியின் அறையில் பரவியதாக சொல்லப்படுகிறது.

அதோடு விமானத்திலும் இந்த தீ பரவியதால் இந்த கோரமான விபத்து நடந்தது, அதன் பிறகு அந்த விமானம் மத்தியதரைக் கடலில் விழுந்தது அதிலிருந்து 66 பேரும் பலியானார்கள். இந்த விபத்தில் 40 எகிப்தியர்களும், 15 பிரான்ஸ் குடிமக்களும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஎன்னுடைய மனைவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் எனக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்! ஹேமந்த் வழங்கிய பகீர் புகார்!
Next articleநீதிமன்றங்களின் இந்த செயல்தான் சாமானிய சாதாரண மக்களை நீதித்துறையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கும்! பிரதமர் நரேந்திர மோடி உரை!