நீதிமன்றங்களின் இந்த செயல்தான் சாமானிய சாதாரண மக்களை நீதித்துறையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கும்! பிரதமர் நரேந்திர மோடி உரை!

0
93

மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு 2 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் வழக்கம் இருந்து வருகிறது. கடைசியாக 2016ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி இந்த மாநாடு நடத்தப்பட்டது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த மாநாட்டிற்குப் பிறகு மறுபடியும் இந்த மாநாடு தற்போதுதான் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நேற்றைய தினமே செய்திகள் வெளியாகியிருந்தன.

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்த சூழ்நிலை காரணமாக, இந்த மாநாடு நடத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்த மாநாட்டில் நீதித்துறையிலிருக்கின்ற குறை நிறைகள் மற்றும் நீதிபதிகள் பற்றாக்குறை, நிலுவையில் இருக்கக்கூடிய வழக்குகளை மிக விரைவில் முடித்து வைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், நாடு முழுவதுமிருக்கின்ற உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்களின் ஒருங்கிணைந்த மாநாடு டெல்லியிலுள்ள விஞ்ஞான் பவனில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்தார்.

நோய்த் தொற்று உள்ளிட்ட காரணங்கள் காரணமாக, தள்ளிப்போன 66 வருட இடைவெளிக்கு பிறகு இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது.

ஆகவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய சட்டத்துறை அமைச்சர், உள்ளிட்டோர் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.

அப்போது உரையாற்றிய அவர், நீதித்துறையை மேம்படுத்த எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து வருகிறோம். நீதித்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காகவும் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

டிஜிட்டல் இந்தியாவின் இன்றியமையாத பகுதியாக நீதித்துறையில் தொழில்நுட்பத்தை இந்திய அரசு கருதுகிறது. இணைய நீதிமன்றங்கள் திட்டம் இன்று மிஷன் முறையில் செயல்படுத்தப்படுகின்றது என கூறியிருக்கிறார்.

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளையும் சேர்க்க வேண்டும், இதனால் நாட்டின் சாமானிய குடிமக்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை அதிகரிக்கும் என தெரிவித்திருக்கிறார்.

மேலும் 2015ஆம் வருடம் பொருத்தமற்ற சட்டங்களாக மாறிய சுமார் 1,800 சட்டங்களை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம். இவற்றில் 1,450 சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தது, ஆனால் 75 சட்டங்களை மட்டுமே மாநிலங்கள் ரத்துசெய்திருக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்