சீண்டிய ரசிகர்! நெத்தியடி கொடுத்த குஷ்பூ!

0
150

சில சமயங்களில் சில ரசிகர்கள் நடிகர் நடிகைகளிடம் எல்லைமீறி பேசுவதும் கேள்விகள் கேட்பதும் தமிழ் சினிமாவின் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இன்று நடிகை குஷ்புவை ஒரு ரசிகர் தேவை இல்லாத  வார்த்தைகளை  பேசி அவரை வம்புக்கு இழுத்து உள்ளார்.

நடிகை குஷ்பூ தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகைகுஷ்பூ சமூக வலைத்தளத்தில் எதையாவது பதிவிட்டால் அதற்கு மாறாக வம்புக்கு இழுக்கும் ரசிகர்கள் சற்று அதிகம் உள்ளனர் என்றே கூறலாம்.

சமீபத்தில் ரசிகர் ஒருவர் குஷ்புவின் பதிவிற்கு ‘பிறந்தநாளுக்கு போட்டோ போடுவீங்க, திருமண நாளுக்கு அந்த புகைப்படத்தை போடுவீங்க! இதுதான் உங்க வாழ்க்கை முறை. அதாவது கூத்தாடிகளின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார். 

இதனைப் பார்த்து கொந்தளித்த குஷ்பு அந்த ரசிகருக்கு நெத்தியடி பதில் அளித்துள்ளார். ‘உங்க அம்மா யாருடா? கூத்தாடி பற்றி தெரிஞ்சு வச்சிருக்க!’ என்று சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.அந்த ரசிகரை பல ரசிகர்கள் கமெண்ட் செய்தும் கேலி செய்தும் வருகின்றனர்.

Previous articleஇரவில் கோயிலுக்கு சென்ற பெண் திடீர் மரணம் !!
Next articleஹாப்பி பர்த் டே மை டியர் அம்மு!வாழ்த்தில் கெத்து காட்டும் விக்னேஷ் சிவன்!