40 வயதில் நச்சுனு ஒரு செல்பி.! புதிய புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா.!!

Photo of author

By Jayachandiran

40 வயதில் நச்சுனு ஒரு செல்பி.! புதிய புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா.!!

Jayachandiran

1999 ஆம் ஆண்டு உன்னைத்தேடி படத்தின் மூலம் மாளவிகா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சுந்தர் சி இயக்கத்தில் அஜித்துடன் நடித்திருந்தார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படங்களில் படு பிசியாக நடித்தார்.

 

இதன்பிறகு திருட்டுபயலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு பட வாய்ப்புகள் பெரிதும் இல்லாத காரணத்தால் நட்பு ரீதியான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதற்கு இடையில் தமிழ் சினிமாவில் இன்றும் பரவலாக பேசக்கூடிய ஒரு பாடலில் அவரது நடனம் பேசப்பட்டு வருகிறது.

கானா உலகநாதன் பாடிய “வால மீனுக்கும் வெல்லாங்கு மீனுக்கு கல்யாணம்’ பாடலில் கவர்ச்சியான நடனத்தை வெளிப்படுத்தி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். 2009 காலகட்டத்திற்கு பிறகு மாளவிகா திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது அவரது 40 வயது செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது சினிமா ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.