உனக்கு வேலையும் தெரியல, பேசாம உட்காரு என்று சொன்னாலும் கேட்க மாட்டேங்குற இயக்குனர்களை கடுப்பேற்றும் நம்பர் நடிகையின் காதலர்!

Photo of author

By Kowsalya

உனக்கு வேலையும் தெரியல, பேசாம உட்காரு என்று சொன்னாலும் கேட்க மாட்டேங்குற இயக்குனர்களை கடுப்பேற்றும் நம்பர் நடிகையின் காதலர்!

Kowsalya

சமீப காலத்தில் நம்பர் நடிகையின் காதலர் மீது இளம் இயக்குனர்கள் மிகவும் கடுப்பில் இருக்கிறார்களாம். காரணம் அது செய் இது செய் என்று இளம் இயக்குனர்களை டார்ச்சர் செய்கிறாராம்.

அவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்று மற்றவர்கள் சொல்லும் அளவிற்கு ஒரே ஒரு படத்தை கொடுத்து விட்டு முன்னணி நடிகையை தட்டி தூக்கி விட்டார் அந்த இயக்குனர்.

அந்த முன்னணி நடிகையும் இதற்கு முன் பல பேரை காதலித்து விட்டு, பின் இவருடன் பல நாட்கள் காதலில் உள்ளார். இருவரும் ஊர் சுற்றுவது, பண்டிகையை கொண்டாடுவது, பிறந்த நாளை கொண்டாடுவது என்று ஜாலியாக தான் இருக்கிறார்கள்.

இதில் என்ன பிரச்சினை என்றால் படப்பிடிப்பிற்கு அந்த முன்னணி நடிகையின் பொட்டிகளை தூக்குவதற்கு செல்கிறாராம் அந்த இயக்குனர். செல்வதோடு மட்டுமில்லாமல் இளம் இயக்குனர்கள் இயக்கத்தில் ஏதாவது ஒரு குறை சொல்லிக்கொண்டு இருக்கிறாராம்.

இவர் பெரிய ராஜமௌலி, சங்கர் என்ற பெரிய இயக்குனர் லிஸ்டில் தன்னை நினைத்துக் கொண்டு இந்த மாதிரி செய்கின்றார் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகையின் பணத்திலேயே ஒரு தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்து அதை தனது காதலியை நடிகையாக போட்டு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த இயக்குனர். அந்தப் படம் ஒரு கொரியன் காப்பி படம் என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அந்தப் படத்தை கூட ஒழுங்காக செய்ய விடமாட்டேன் என்கிறார் அந்த நடிகையின் காதலர். அந்த படத்தை இயக்கும் இளம் இயக்குனர் தயாரிப்பில் அதை செய் இதை செய் என்று உயிரை வாங்குகிறாராம்.

உனக்கு வேலையும் தெரியல சும்மா உட்காருனாலும் உட்காரமாட்டேன்ற் என்ற கடுப்பில் அந்த இளம் இயக்குனர் இயக்கி வருகிறாராம். இதனால் நடிகையுடன் அந்த இயக்குனர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் நடிகைக்கு பட வாய்ப்பு தர மாட்டோம் என்று சொன்னால்தான் திருந்துவார் என்று வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.