சண்முகராஜா என்ற பெயர் கொண்ட இயக்குனர் மிஷ்கின் அவர்கள், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முகங்களை கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.
இப்படிப்பட்ட மிஸ்கின் அவர்கள் திரைப்பட நடிகர்கள் நாய்களைப் போன்றவர்கள் என்று குறிப்பிட்டிருப்பது திரை உலகில் மட்டும் மட்டுமல்லாமல் ரசிகர்களிடையேயும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகிறது.
சென்னை வடபழனியில் நடைபெற்ற அலங்கு படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் மிஸ்கின் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
சினிமாக்காரர்கள் எப்பொழுதுமே நாய்களைப் போலத்தான். அவர்களை கொஞ்சம் கருணையோடு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மிஸ்கின் அவர்கள் கூறியிருக்கிறார். மேலும் அவர், நாய்களிடமிருந்து தான் அதிகம் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இயக்குனர் முஸ்கின் இவ்வாறு பேசியிருப்பது திரையுலகில் மிகுந்த பரபரப்பையும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்களிடையே கண்டனத்தையும் பெற்று வருகிறது.
குறிப்பு :-
விரிவான கதைக்களம் மற்றும் உண்மையான நிராயுதபாணியான தற்காப்புத் தாக்குதல்கள் மற்றும் நிலைப்பாடுகளைப் பயன்படுத்தி அவரது விசித்திரமான போர்க் காட்சிகளுக்காக பெரிதும் பேசப்பட்டவர் இயக்குனர் மிஸ்கின் என்பது குறிப்பிடத்தக்கது.