பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை !! மாணவர் எண்ணிக்கை குறித்து ஆய்வு

Photo of author

By Parthipan K

2019-2020 மற்றும் 2020-2021 ஆண்டுக்கான பள்ளி மாணவர் சேர்க்கை விவரத்தை வரும் 7-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை சார்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில்,
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகையான உயர்கல்வி மற்றும் மேல்நிலை கல்விகளில் 2019-2020 கல்வியாண்டில் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கையும் ,மற்றும் 2020 – 2021ஆம் கல்வியாண்டில் வருகின்ற 30-தேதி வரை சேர்க்கப்பட்டுள்ள எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் மொத்த எண்ணிக்கையையும் கணக்கு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை தகவல்களை ,அடுத்த மாதம் 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பள்ளி கல்வி துறை இயக்குனர் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.