காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்!! பாஜக காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே கல்வீச்சு!!

Photo of author

By Savitha

காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்!! பாஜக காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே கல்வீச்சு!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல். எம் எல் ஏ தலைமையில் சாலை மறியலால் பரபரப்பு.

காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததற்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடந்த சில நாட்களாக பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலையில் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் சுமார் 30 பேர் ஊர்வலமாக பாஜக அலுவலகம் முன்பு திரண்டு பாஜகவுக்கு எதிராக முழக்கம் எழுப்பியுள்ளனர்.

அப்போது பாஜக அலுவலகத்தில் அமர்ந்திருந்த பாஜக தொண்டர்கள் காங்கிரஸ் தொண்டர்களுடன் வாய்தகராறில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் கல் வீச்சு போன்றவை நடைபெற்றன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே போலீசார் அங்கு வந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் தப்பி ஓடினார்.

தகவலை அறிந்து திரண்ட பாஜக தொண்டர்களும் நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி தலைமையில் பாஜக அலுவலகம் முன்புள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக அவதியாக வாகன போக்குவரத்து தம்பித்தது பின்னர் போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு பாஜகவினர் கலைந்து சென்றனர்.

போராட்டத்தின் போது பாஜகவினருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது. இது விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜக அலுவலகம் மீது கல்வீசி தாக்கியதோடு பாஜகவினர் மீது கல் வீசிய காங்கிரஸ் கட்சியினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி போராட்டம் நடத்தியதாகவும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் போராட்டத்தை கைவிட்டதாக தெரிவித்தார்.

மேலும் இன்று இரவு  சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை என்றால் பாஜக சார்பில் அடுத்த கட்டமாக பெரும் போராட்டம் நடைபெறும் எனவும் கூறினார்.