ஸ்டாலின் உத்தரவை மீறும் துரைமுருகன்: திமுகவில் மீண்டும் புகைச்சல்! காரணம் இவர்தான் !

Photo of author

By Parthipan K

ஸ்டாலின் உத்தரவை மீறும் துரைமுருகன்: திமுகவில் மீண்டும் புகைச்சல்! காரணம் இவர்தான் !

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நகரச்செயலாளராக இருக்கும் சாரதிகுமார் என்பவர் மேல் திமுக தலைவர் மு க ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை மீறும் முனைப்பில் இருக்கிறார் துரைமுருகன்.

திமுகவில் கலைஞரின் மறைவு மற்றும் பேராசிரியர் க அன்பழகனின் ஓய்வு ஆகியவற்றுக்குப் பின்னர் தலைவர் ஸ்டாலினுக்கும் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கும் இடையே அவ்வப்போது முட்டல் மோதல் எழுந்து வருவதாக சொல்லப்படுகிறது. கலைஞருக்கு உற்ற நண்பனாக இருந்த துரைமுருகன் அவரது மகன் ஸ்டாலினுக்கு அவ்வாறு இருக்க விருப்பப் படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு முறை அது நிரூபணமாகியுள்ளது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகர செயலாளர் சாரதிகுமார் என்பவர் துரைமுருகனின் ஆதரவாளர். இவரது மனைவி ரம்யா. சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் ‘நான், என் கணவரைக் காதல் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் அவருக்கு அதற்கு முன்பாகவே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. அந்த உறவு எனக்குத் தெரியவந்து நான் தட்டிக்கேட்டதால், என்னை தாக்கினார்கள். இது சம்மந்தமாக திமுக தலைமையகம் அறிவாலயம் சென்று அங்கு புகார் கொடுத்தேன். ஆனால் அதை தெரிந்துகொண்டு என்னை மிரட்டுகிறார்கள். அதனால் எனக்கும் என் குழந்தைக்கும் பாதுகாப்பு வேண்டும்’ எனக் கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.

இந்த விஷயத்தால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு அவராகவே பதவியில் இருந்து விலகுவது மாதிரி விலகச் சொன்னார். அது பற்றிய அறிவிப்பு முரசொலியில் வந்தது. இந்நிலையில் சாரதியின் ஆதரவாளர்கள் துரைமுருகனின் வீட்டில் ஒன்று கூடி அவரை மீண்டும் நகரச் செயலாளராக நியமிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். அதற்கு துரைமுருகன் ‘அவன் நல்லவனோ, கெட்டவனோ… எனக்கும் வாணியம்பாடிக்கும் அவன் வேண்டும்… அவன் கட்சியை வளர்த்தவன்.. என தளபதியிடம் சொல்கிறேன். இப்போது நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள்’ என அவர்களை சமாதானப்படுத்தி வைக்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதி.