சிம்புவால் தனுஷ் வெற்றிமாறன் இடையே ஏற்பட்ட மோதல்? சிம்புவை உள்ளே கொண்டு வந்ததால் 45 கோடி இழப்பு 

0
57

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு காம்பினேஷன் இருக்கும். அதாவது இந்த இயக்குனருடன் இந்த நடிகர் சேர்ந்தால் படம் கன்பார்ம் வெற்றி என ஒரு கூட்டணி ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. அந்த வகையில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் சேர்ந்தால் அந்த படம் எப்போதும் வெற்றி பெற்றுவிடும் என்பது மரபு.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை வெற்றிமாறன் தற்போது எழுதிவருவதாகவும், கூடிய விரையில் வடசென்னை 2 அன்புவின் எழுச்சி தயாராகப்போவதாகவும் கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தனுஷிற்கு பதிலாக சிம்புவை வைத்து வடசென்னை 2 படத்தை எடுக்கப்போவதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்தன. வடசென்னை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், எனவே அவரிடம் தான் வடசென்னை படத்தின் உரிமம் இருக்கிறது. தனுஷை விட்டுவிட்டு சிம்புவை வைத்து படம் எடுத்தால் வடசென்னை படத்திற்கான NOC 45 கோடி தரவேண்டும் என தனுஷ் வெற்றிமாறனை நிர்பந்தப்படுத்தியதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் இதன் உண்மைத்தன்மை பற்றி வெற்றிமாறன் விளக்கியுள்ளார். வெற்றிமாறனும், சிம்புவும் இணையப்போகும் படம் வடசென்னை 2 கிடையாது. வடசென்னை பாகம் 1 நடக்கும் காலக்கட்டத்தில் வடசென்னையில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய படம் தான் இது. வடசென்னை உலகிற்குள் இந்த படம் வரும். வடசென்னையில் இடம்பெற்ற சில கதாப்பத்திரங்கள் இந்த படத்தில் இடம்பெறுவார்கள். மற்றபடி வடசென்னை படத்திற்கும், சிம்பு படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இதுபற்றி தனுஷிடம் வெற்றி கேட்டபோது நீங்க சிம்புவை வச்சு என்ன படம் வேணும்னாலும் பண்ணிக்கோங்க, எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, NOC தொகையில் எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம் என்று அன்பாக சொல்லி இருக்கிறார் தனுஷ். தனுசுக்கும், எனக்குமான நட்பு ரொம்ப ஆழமானது. கூடிய விரையில் வடசென்னை 2 பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என்றும், சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகப்போகும் படத்துக்கு தனுஷ் தனது முழு ஆதரவை கொடுத்ததாகவும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் வெற்றிமாறன்.

Previous articleவெறும் பாடல் என்று நம்மால் கடந்துவிட முடியாது! படத்தின் வெற்றியையே பாட்டு தான் தீர்மானிக்கும்! வெறும் பாடலுக்காக ஏன் கோடிகளை வாரிக்குவிக்கிறார்கள்?
Next articleஅண்ணாமலை பேச்சால் அதிர்ந்த திமுக? என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் ஸ்டாலின்!