விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் இடையே ஏற்பட்ட மோதல்!! கடைசியாக வென்றது யார்!!

அமரன் பட வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். இவர் தற்சமயம் எஸ்கே 23 என்ற படத்தில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பணிபுரிந்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவடையும் நிலையில், இவரது அடுத்த கமிட்மெண்டான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் எஸ் கே 24 படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படக்குழு இதனை பற்றிய தகவல் எதுவும் வெளிவிடாத நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே25 படத்தில் அவ்வப்போது இவர் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான டீசர் நேற்று வெளியான நிலையில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முன்னணி பாடகர் விஜய் ஆண்டனி தனது படத்திற்காக நேற்று காலையில் தமிழில் “சக்தி திருமகன்” என்றும், இதே படத்தை தெலுங்கில் பராசக்தி என்றும் பெயரிடப்பட்டு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் எஸ்கே25 படமும் பராசக்தி என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சிவகார்த்திகேயனின் தெலுங்கு படத்திலும் பராசக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி இரண்டு வருடங்கள் முன்பே இதன் பெயருரிமை பெற்றுள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இந்த டைட்டில் ஆனது சிவாஜி கணேசனின் வாழ்க்கையை மாற்றிய ஒன்று. அதனால் பிரபு குடும்பத்தினருடனும் சிவகார்த்திகேயன் டீம் முறையாக அனுமதி பெற்றுள்ளது. மேலும் ஏவிஎம் ஸ்டூடியோ விலும் அனுமதி பெற்றுள்ளது. இது சர்ச்சையாக கிளம்பி இருந்தது. இவ்விரு பட குழுவும் இணைந்து பேச்சுவார்த்தை மூலம் தற்போது தீர்வு கண்டு உள்ளனர். அதன்படி விஜய் ஆண்டனி படத்தின் தெலுங்கு பெயரை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.