10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!!

0
133
Class 10th and 11th Exam Results!! Department of Education announced the date!!
Class 10th and 11th Exam Results!! Department of Education announced the date!!

10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!!

தமிழகத்தில் 10 வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 20 ஆம் தேதி முடிவுற்றது. இந்த தேர்வினை 9,96,089 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர். அதே போல் 11 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 5 ஆம் தேதி முடிவுற்றது.

12ம்  வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியாகி இருந்தது. இந்நிலையில்  10ஆம் வகுப்பிற்க்கான தேர்வு முடிவுகள் மே 17 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதியும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அனால் தற்போது 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியாகிறது. வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், மதியம் 2 மணிக்கு 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in  மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளங்களில் மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் தங்களது பள்ளிகள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். தங்கள் பள்ளிகளில் கொடுத்த செல்போன் எண்ணிற்கு, பள்ளிகள் மூலம் குறுஞ்செய்தி அனுப்ப படும்.

author avatar
CineDesk