10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்  தேர்வு அட்டவணை!! அதிரடி அறிவிப்பு!! 

0
35
Class 10th and 12th Common Exam Schedule!! Action Announcement!!
Class 10th and 12th Common Exam Schedule!! Action Announcement!!

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்  தேர்வு அட்டவணை!! அதிரடி அறிவிப்பு!!

இந்த ஆண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்இ இது குறித்து முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 12ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் அதற்கான கட்டுபாடுகளையும் அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு 15 ஆம் தேதி தேர்வுகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் தேர்வு அட்டவணை மாநிலங்களின் ஆலோசனை நடத்தி விட்டு மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பாடத் தேர்வுகள் இறுதி செய்யப்பட்ட பின் வெளியாகும். மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 2  தேதி முதல் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். மேலும் தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தது. அதனையடுத்து மாணவர்கள் அதற்கேற்ப தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு உள்ளது.

author avatar
Jeevitha