மருத்துவமனையில் மருத்துவராக மாறிய தூய்மை பணியாளர் பெண்! உயிருக்கு உத்தரவாதம் இல்லை நோயாளிகள் குற்றச்சாட்டு!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் அவர் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று மாலை சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த பிறகு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு டிரிப்ஸ் போட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அப்போது செவிலியருக்கு பதிலாக மருத்துவமனையில் சுகாதார மற்றும் தூய்மை பணியில் ஈடுபடும் ஒப்பந்த பணி செய்யும் பெண் ஒருவர் சக்திவேல்க்கு டிரிப்ஸ் போட்டுள்ளார்.
அதற்கு பிறகு அந்த டிரிப்ஸ் முடிந்ததும் அடுத்த பாட்டிலை மாற்ற ஒப்பந்த பணியாளர் ஆண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவர் டிரிப்ஸ்யை சரியாக போடவில்லை அதனால் சக்திவேலின் ரத்தம் டிப்ரிஸ் ஏற தொடங்கியது அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கூச்சல்யிட்டனர், அந்த காட்சிகளை அருகில் இருந்தவர் வீடியோ பதிவு செய்துள்ளார்.இதனையடுத்து சக்திவேல் இங்கு சிகிச்சை பெற்றால் என்னுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லை என கூறி அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.இதனை தொடர்ந்து இனி இவ்வாறு நடக்க கூடாது என மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.