பருவநிலை மாற்றத்தை கருத்தரங்க மேஜையில் இருந்து மட்டும் போரிட முடியாது – பிரதமர் மோடி!!
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான உலக வங்கியின் கருத்தரங்கில் பிரதமர் மோதி காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது உரையாற்றிய பிரதமர் நுண் பாசனம் led பல்புகள் பொருத்தம் திட்டம் இயற்கை விவசாயம் சிறு தானியங்களுக்கான ஊக்கம் போன்றவற்றின் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வழிகளை இந்தியா உலகிற்கு காட்டியிருப்பதாக குறிப்பிட்டார்.
இந்த பூமிக்காக செய்யப்படும் நல்ல செயல்கள் முக்கியமானதாக தெரியாமல் போனாலும் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அவற்றை ஒன்று சேர்ந்து மேற்கொள்ளும் போது அதன் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என குறிப்பிட்டார்.
நமது முயற்சிகள் 22 பில்லியன் யூனிட் மின்சாரத்தையும் ஒன்பது ட்ரில்லியன் நீரையும் சேமிக்கும் என தெரிவித்த பிரதமர் 375 மில்லியன் டன் கழிவுகள் வெளியேற்றத்தை குறைக்கும் எனவும் 170 மில்லியன் டாலர் செலவுகளை குறைக்கும் என குறிப்பிட்டார்.
பருவநிலை மாற்றத்திற்கான போரை கருத்தரங்கு மேசையிலிருந்து மேற்கொள்ள முடியாது என தெரிவித்த பிரதமர் அவற்றை உணவு மேசையில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் நமது பூமிக்காக தனி நபர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பருவநிலை மாற்றத்திற்கான போரில் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.