குளோசிங் பெல்: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!! டைட்டன் கம்பெனி, டாட்டா ஸ்டீல் நஷ்டத்தில் மூழ்கியது!!

Photo of author

By Preethi

குளோசிங் பெல்: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!! டைட்டன் கம்பெனி, டாட்டா ஸ்டீல் நஷ்டத்தில் மூழ்கியது!!

மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தை குறியீடுகளான சென்சஸ் மற்றும் நிப்டி வாரத்தின் முதல் நாளான இன்று பச்சை நிறத்தில் முடிந்தது. இந்தியா VIX 1 சதவீதம் உயர்ந்து உள்ளது. மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 363.79 புள்ளிகள் என 0.69% உயர்ந்து 52,950.63 ஆக உள்ளது. தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 122.20 புள்ளிகள் என 0.78% உயர்ந்து 15,885.20 ஆகவும் இருந்தது. இன்று பங்கு சந்தையில் சுமார் 2007 பங்குகள் முன்னேறியுள்ளன. மேலும் 1071 பங்குகள் குறைந்துவிட்டன. 136 பங்குகள் மாறாமல் உள்ளன.

அதிக இழப்பை சந்தித்தவர்கள் (Top Losers): ஸ்ரீ சிமெண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, பிபிசிஎல், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகியவை நிஃப்டி லாபத்தில் முதலிடத்தில் உள்ளன. யுபிஎல், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் என்டிபிசி ஆகியவை அதிக நஷ்டத்தில் உள்ளன.

அதிக  லாபம் ஈட்டியவர்கள் (Top Gainers):  ஆட்டோ, ஐடி, எண்ணெய் & எரிவாயு மற்றும் ரியல் எஸ்டேட் குறியீடுகள் 1-4.5 சதவிகிதம் வரை அனைத்து துறைக் குறியீடுகளும் பச்சை நிறத்தில் முடிந்தன.

குளோசிங் பெல்: இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் 363.79 புள்ளிகள் ஆகவும், நிஃப்டி 122.20 புள்ளிகள் ஆகவும் உயந்துள்ளது.  மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் தலா 1 சதவீதம் உயர்ந்துள்ளன.