மூடப்படும் யுபிஐ சேவைகள்!! ஸ்தம்பித்து போகும் பணப்பரிவர்த்தனைகள்!!

Photo of author

By Gayathri

நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக திகழும் யுபிஐ பண பரிவர்த்தனைகள் நவம்பர் மாதத்தில் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதனால் யுபிஐ பயனாளர்கள் தங்களது அக்கவுண்டில் இருந்து பணத்தினை அனுப்பவோ அல்லது தன்னுடைய அக்கவுண்டிற்கு பணத்தினை பெறவும் இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் நாள்தோறும் தங்களது அனைத்து இடங்களிலும் யு பி ஐ ட்ரான்ஷாக்ஷனை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பணத்தினை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்பது இல்லாமலேயே போய்விட்டது என்றும் கூறலாம்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் தற்போது நவம்பர் மாதத்தில் இரண்டு நாட்களுக்கு யுபிஐ சேவை மூடப்படும் என்ற அறிவிப்பு மக்களிடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்த தகவலை ஹெச்டிஎஃப்சி வாங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தகவல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஹெச்டிஎஃப்சி வங்கி இதனை குறிப்பிடும் பொழுது, ஹெச்டிஎஃப்சி வங்கியின் யுபிஐ சேவையானது சில தேவையான கணினி பராமரிப்பு காரணமாக நவம்பர் மாதத்தில் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

ஹெச்டிஎஃப்சி வங்கியின் யுபிஐ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நவம்பர் 5 மற்றும் நவம்பர் 23ஆம் தேதி களில் தங்களுடைய யுபிஐ ட்ரான்ஸ்சாக்சனை பயன்படுத்த முடியாது என்றும், அதற்கான நேரங்கள் நவம்பர் 5 நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலான இரண்டு மணி நேரமும் மற்றும் நவம்பர் 23 நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை என்றும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த நேரத்தில் நிதி மற்றும் நிதி அல்லாத யுபிஐ பரிவர்த்தனைகள் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகள் மற்றும் ரூபே கார்டுகளின் மூலம் சாத்தியமாகும் என்று குறிப்பிட்டு இருக்கிறது.