வருவாய் இழப்பால் அம்மா உணவகங்கள் மூடல் – விளக்கம் அளிக்கும் மேயர்!

Photo of author

By Rupa

வருவாய் இழப்பால் அம்மா உணவகங்கள் மூடல் – விளக்கம் அளிக்கும் மேயர்!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் பல திட்டங்களை முடக்கி விட்டது. அவற்றிலும் குறிப்பாக அம்மா உணவகங்களை மூட வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் பலரும் கூறிவந்தனர். அந்த வகையில் சட்டமன்ற கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் அம்மா உணவகத்தை மூடுவதால் இப்போது என்ன ஆகப் போகிறது என்று கேட்டார்.

அவர் பேசும் பொழுது அம்மா உணவகத்தை மூடுவதில் இவர்கள் குறிக்கோளாக இருக்கிறார்கள் என்று அனைவரும் அறிந்தனர். ஆனால் அம்மா உணவகத்தை மூடிவிட்டால் பாமர மக்களின் வயிற்றில் அடித்தது போல் ஆகிவிடும். அந்த வகையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் அனைத்தும் 756 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாக சென்னை மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தனசேகர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் இதிலிருந்து வருவாயாக வெறும் 500 ரூபாய் மட்டுமே கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அம்மா உணவகங்களை நடத்த வேண்டுமா? அதனை மூடிவிடலாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.இவருக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மேயர் பிரியா கூறி இருப்பதாவது, அம்மா உணவகம் ஆரம்பித்ததில் இருந்து எப்படி இயங்கி வருகிறதோ அதே போல் தான் இறுதிவரை செயல்படும் என்று கூறினார்.

மேலும் அதிக அளவு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அம்மா உணவகங்களை கண்டறிந்து அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அங்குள்ள அம்மா உணவகங்களுக்கு ஏதேனும் பணியாட்கள் தேவைப்பட்டால் அங்கிருக்கும் கவுன்சிலர்களே  நியமித்துக் கொள்ளலாம் என்று ஆணையிட்டார். அம்மா உணவகங்கள் வழக்கம் போல் எப்பொழுதும் செயல்படும் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து அறிக்கை தாக்கல் செய்த தனசேகர் அங்கிருந்த நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அதில், அம்மா உணவகத்தை நிரந்தரமாக மூடும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. ஆனால் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அம்மா உணவகங்களை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார்.