மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: முதல்வர், துணை முதல்வர் ராஜினாமாவா?

Photo of author

By CineDesk

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: முதல்வர், துணை முதல்வர் ராஜினாமாவா?

மகாராஷ்டிராவில் அரசியல் களம் கடந்த ஓரிரு மாதங்களாக டி20 கிரிக்கெட் போட்டி போல ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக இருந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவால் பெரும் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன

முதல்வர் பட்னாவிஸ் தலைமையிலான அரசு நாளை மாலை 5 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நேற்று சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 162 எம்எல்ஏக்கள் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அணிவகுக்கப்பட்ட நிலையில் பாஜக, அஜித் பவார் கூட்டணிக்கு 126 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

எனவே நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பட்னாவிஸ் அரசு தப்பிக்க வழியே இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் சற்று முன் துணை முதல்வர் அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதனை அடுத்து முதல்வர் பட்னாவிஸ் அவர்களும் ராஜினாமா செய்துவிட்டதாகவும் இன்னும் சில நிமிடங்களில் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னரே முதல்வர் மற்றும் துணை முதல்வர் ராஜினாமா செய்துள்ளதாக வெளி வந்துள்ள தகவல் மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் விரைவில் சிவசேனா தலைமையிலான புதிய அரசு மகாராஷ்டிராவில் பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.