வரதட்சணை கொடுமைக்கான தண்டனை உயர்வு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

0
143

வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரை செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், பாலியல் தொழிலுக்காக பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்திற்கு அதிகபட்ச ஆயுள் தண்டனை வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும், பெண்களை தவறான நோக்கத்திற்காக பின்தொடரும் குற்றத்திற்கு தண்டனை 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Previous articleஇந்திய சீன எல்லை பதற்றம் : சீனாவை எச்சரிக்கும் நடவடிக்கை
Next articleபுதிதாக வேறொரு நகரில் இருந்து பரவும் கொரோனா