ஆட்சியைப் பிடிப்பது எப்படி! பித்துப்பிடித்து திரியும் எதிர்க்கட்சி!

Photo of author

By Sakthi

நேற்றைய தினம் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பாக வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் எதிர்வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரும் என்று அறிக்கை அறிக்கை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மக்களின் மனநிலை மொத்தமாக வேறு விதமாக இருக்கிறது.தமிழகத்தைப் பொருத்தவரையில் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி இறப்பிற்குப் பின்னர் திமுகவை தமிழக மக்கள் மறந்தே போய் விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஆளும் கட்சி மக்களிடையே பிரபலம் அடைந்து இருக்கிறது. அதோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து சுற்று பயணத்திலேயே இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எடப்பாடியாரின் அலை அடித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தநிலையில், எதிர்க்கட்சியாக திமுக 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இல்லாத விரக்தியில் எப்படியாவது இந்த முறை அதிமுகவை வீழ்த்திவிட்டு நாம் ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. அதற்காக அந்தக் கட்சி அதிமுகவை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்களிடம் தெரிவித்து வருகிறது.தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு என்னதான் அதிமுகவை பற்றி பெரிய அளவில் திமுக குற்றம் சுமத்தி வந்தாலும் அந்த கட்சிக்கு தமிழக மக்களிடையே இருந்து வரும் நன்மதிப்பு மாறுவதாகத் தெரியவில்லை. அதோடு கருத்து கணிப்பும் கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது தமிழக மக்களிடையே பெரிய அளவில் வெறுப்பு இல்லை என்று தான் வந்திருக்கிறது.

இந்த நிலையில், புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பாக தேர்தல் கருத்துக்கணிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் அதிமுக மற்றும் திமுக என்ற இரு திராவிட கட்சிகளுக்கு போட்டியான கட்சியை இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதுமட்டுமல்லாமல் தமிழகத்திலே எதிர் வரும் சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு கருத்துக் கணிப்பு வெளியிட்ட அந்த தொலைக்காட்சி கூடவே தமிழகத்தில் ஆதிமுக திமுக என்ற இரு திராவிட கட்சிகளுக்கு இணையான மற்றொரு கட்சி இல்லை என்றும் தெரிவித்திருக்கிறது. அதோடு இந்தக் கருத்துக் கணிப்பை தவிர்த்துவிட்டு பல பொதுவான கருத்து கணிப்புகளை இதனுடன் ஒப்பிட்டு பார்த்தோமானால் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக மீது மக்களிடையே பெரிய அளவில் வெறுப்புணர்வு இல்லை என்றுதான் சொல்லப்படுகிறது.

அதனை நேரடியாக அல்லாமல் சூசகமாக சுட்டிக்காட்டும் விதமாக தான் தமிழகத்திலேயே அதிமுக திமுக என்ற இரு கட்சிகளை தவிர்த்து மற்ற எந்தக் கட்சிகளும் ஆட்சிக்கு வரமுடியாது என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த கருத்துக் கணிப்பில் இந்த வார்த்தையை நாம் எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் தமிழகத்திலே திமுக ஆட்சி அமையப்போவதில்லை என்று எடுத்துக் கொண்டால் அது சரியாக இருக்கும் என்பதே அநேக மக்களின் கருத்தாக இருந்து வருகிறது.
ஆம் தமிழக மக்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாத ஒரு ஆட்சியாக தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு இருக்கிறது ஆகவே எதிர்வரும் சட்டசபை தேர்தலிலும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்ற ஒரு நிலை தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இதனை கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சி பொறுப்புக்கு வர முடியாத திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என சொல்லப்படுகிறது ஆகவே இதுபோன்று தனக்கு சாதகமான ஊடகங்கள் மூலமாகவும், பத்திரிக்கைகள் மூலமாகவும், தனக்கு சாதகமாக ஒரு கருத்துக்கணிப்பை உருவாக்கி அதனை வெளியிட்டு அதன் மூலமாக எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்து விடலாம் என்பதே தற்போது திமுகவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.அதோடு அதிமுகவிற்கு தமிழக மக்களிடையே இருக்கும் வரவேற்பைப் பார்த்த திமுகவின் தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அவர்களின் அறிவுரைப்படி இதுபோன்ற திமுகவிற்கு சாதகமான கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

நீண்ட காலமாக ஆட்சியை பிடிக்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கும் எதிர்கட்சியான திமுக எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற விதத்தில் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி பார்க்கிறது. ஆனால் அதிமுக என்ற கட்சியை தமிழக மக்களிடம் ஒரு வெறுப்புணர்வு உள்ள கட்சியாக மாற்றுவதற்கு அந்த கட்சியால் முடியவில்லை என்று தெரிகிறது.ஒரு சில திமுக ஆதரவு தொலைக்காட்சிகளில் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் அதிமுகவையும், அந்த கட்சி கொண்டு வந்த திட்டங்களையும், மிகக் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து விளம்பரங்களை வெளியிட்டு கொண்டிருக்கிறது எதிர்கட்சியான திமுக. இது அனேக மக்களிடம் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

தங்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று இவ்வளவு கீழ்த்தரமான வேலைகளை எல்லாம் ஒரு கட்சியால் செய்ய முடியுமா என்கிற ரீதியில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் விவாதங்கள் தொடங்கிவிட்டன. திமுகவைப் பொறுத்தவரையில் அது நேர்மையான வழியோ அல்லது கீழ்த்தரமான வழியோ எப்படியாவது அதிமுகவை வீழ்த்திவிட்டு நாம் ஆட்சி கட்டிலில் அமர்ந்து விட்டால் போதும் என்கிற ரீதியில் அந்த கட்சி செயல்பட்டு வருகிறது.இதையெல்லாம் கூர்ந்து கவனித்த தமிழக மக்கள் அனைவரும் திமுகவை தற்போது கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். இதை அறியாத திமுக எப்படியாவது ஆட்சி கட்டிலில் அமர்ந்து விட்டால் போதும் என்ற ஒரே நோக்கத்தில் சில பல கேவலமான செயல்களை செய்து வருகிறது.