துரைமுருகனுக்கு செக் வைத்த எடப்பாடியார்! ஷாக்கான திமுக வட்டாரம்!

Photo of author

By Sakthi

துரைமுருகன் தன்னுடைய சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு தயாரா? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருக்கின்றார் . சென்னையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவினர் வீட்டிற்காக உழைத்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டி இருக்கிறார். சென்னை மேயராக இருந்த சமயத்தில் ஸ்டாலின் உறங்கிக் கொண்டிருந்தாரா? என்று கேள்வி எழுப்பி அவரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றார்.

இவருக்கு திமுக தரப்பில் இருந்து பதில் தெரிவித்த அந்த கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், சென்னையில் முதலமைச்சர் நாள்தோறும் கோட்டைக்கு செல்லும் பாலம் கட்டப்பட்டது ஸ்டாலின் இருந்தபோதுதான் என்று தெரிவித்தார். முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே சாதனைகளை சொல்ல இயலாமல் திணறிய இருக்கின்ற முதலமைச்சர் அடுத்தடுத்த கூட்டங்களில் என்ன செய்யப்போகிறார் என்று விமர்சனம் செய்து இருக்கின்றார்.

இந்த நிலையிலே, கோயம்புத்தூர் பகுதியில், நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துரைமுருகனுக்கு பதில் கொடுத்திருக்கிறார். வாக்காளர்களுக்கு அளிக்க வைத்திருந்த பணம் பிடிபட்ட காரணத்தால், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்ட வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதை மறந்துவிட்டு அதிமுக மீது குற்றம்சாட்டி இருக்கிறார் எனவும் குறிப்பிடுகின்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

நான் என்னுடைய சொத்து விவரங்களை அளித்து இருக்கின்றேன். அதேபோல துரைமுருகன், தன்னுடைய சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு தயாராக இருக்கின்றாரா? என்று கேள்வி எழுப்பிய முதல் அமைச்சர், துரைமுருகனுக்கு படிக்க உதவி புரிந்தது எம்ஜிஆர்தான் என்று தெரிவித்தார். அன்றைய தினம் அவ்வாறு இருந்தவர் இன்று எப்படி இருக்கின்றார் என்பது மக்களுக்குத் தெரியும். திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டி விட்டுச் சென்ற பல திட்டங்களை அதிமுக ஆட்சியில்தான் முடித்து வைத்து இருக்கின்றோம். என்று விளக்கம் கொடுத்தார்.