திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை! அதிர்ச்சியான முதல்வர்!

Photo of author

By Sakthi

பதிப்புச் செம்மல் க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுடைய நினைவாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்கால தமிழ் அகராதியை வருடம் தோறும் இலவசமாக அரசு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இது சம்பந்தமாக அந்த கட்சியின் சார்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ் பதிப்புலகின் தனி அடையாளமாக போற்றப்படுபவர் க்ரியா ராமகிருஷ்ணன், அவர்களுடைய மறைவுச் செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கின்றது தொற்று அந்த மாபெரும் சகாப்தத்தை பலி கொண்டு விட்டது என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கின்றது.

ஆகவே அவருக்கு எங்களுடைய கட்சியின் சார்பாக என்னுடைய அஞ்சலியையும், அவருடைய பிரிவினால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், தெரிவித்துக் கொள்கின்றேன். க்ரியா ராமகிருஷ்ணன் ஜெர்மன் பிரெஞ்சு போன்ற பல மொழிகளில் இருந்து தமிழருக்கு பல படைப்புகளை கொடுத்திருக்கின்றார்.

அதன் மூலமாக தமிழ் உரைநடையில் புதிய எழுத்து முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார். சூழலியல், மருத்துவம், சிறார் இலக்கியம், தொல்லியல், என்று பல துறைகளை சார்ந்த பல நூல்களை வெளியீடு செய்தவர். அவர் பதிப்பாளராக மட்டும் இல்லாமல், பிரதியை மேம்படுத்தும் ஆற்றல் உடையவராகவும் தமிழ் அறிஞர்களின் கால் நூற்றாண்டு கால உழைப்பின் விளைவாக உருவான தற்கால தமிழ் அகராதியை வெளியிட்டுள்ளார்.

சென்ற 2010ஆம் வருடம் திமுக ஆட்சியின் போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அகராதி ஒன்றை இலவசமாக கொடுப்பது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.இப்போது அந்த திட்டம் நடைமுறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. மாணவர்களுடைய தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளின் அறிவை மேம்படுத்தும் விதமாக க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுடைய நினைவாக பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் அவர் வெளியிட்டு இருக்கின்ற தற்கால தமிழ் அகராதி இலவசமாக கொடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன். இதுவே க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுக்கு செய்யப்படும் சரியான அஞ்சலியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கின்றது.