புர்ஜ் கலீபாவில் ஒளிர்ந்தது தமிழ் செம்மொழி! முதலமைச்சர் ஸ்டாலின் ஆர்வத்துடன் பார்வையிட்டார்!

Photo of author

By Sakthi

துபாயில் கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் சர்வதேச கண்காட்சி நடைபெற்று வருகிறது இந்த கண்காட்சி நடப்பு மாதம் 31ஆம் தேதி அறையில் நடைபெறுகிறது என்றும் சொல்லப்படுகிறது. மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் 31ம் தேதி வரையில் அங்கு தமிழ்நாடு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதோடு தமிழகம் சார்பாக அங்கே கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தனர் மேலும் இந்திய தரப்பிலும் துபாயில் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நாடுகள் பங்கேற்று கொள்ளும் இந்த நிகழ்வில் இந்தியா பங்கேற்பது நமக்கு பெருமை என்றால் அதில் தமிழகம் தனி பொலிவுடன் திகழ்வது இன்னும் பெருமையாக கருதப்படுகிறது.

இதற்கு நடுவே சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்காக 4நாள் பயணமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்றிருக்கிறார். இந்த எக்ஸ்போ கண்காட்சியிலுள்ள தமிழ் நாட்டிற்கான அரங்கை நேற்று அவர் திறந்து வைத்தார்.

இந்த கண்காட்சியில் தமிழகத்தின் தொழிற்சாலைகள் உட்கட்டமைப்பு என்று அனைத்தையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் விதத்தில் இந்த அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தமிழரின் பண்பாட்டையும், பெருமையையும், விளக்கும் விதத்தில் காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்டது இதனை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.