திடீரென்று சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியது ஏன்? சிஎஸ்கே சிஇஓ விளக்கம்!

0
72

ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணைக்கு கேப்டனாக இருந்து வந்தவர் மகேந்திர சிங் தோனி.அவர் தலைமையின்கீழ் தொடர்ந்து 4 முறை இந்த ஐபிஎல் கோப்பையை சென்னை அணி வென்றிருக்கிறது மேலும் அவர் இந்திய அணியில் இருந்த வரையில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் என்றும் எல்லோருக்கும் நன்றாக தெரியும்.

மேலும் அவர் விக்கெட் கீப்பிங் செய்யும்போது பேட்ஸ்மேன்களின் கவனம் எதிரே வருகின்ற பந்தின் மீது இருக்கிறதோ, இல்லையோ, இவர் மீது இருக்கும் ஏனென்றால் அவர் பேட்ஸ்மேன்களின் பின்னால் நின்றால் பேட்ஸ்மேன்கள் ஒருவித நடுக்கத்துடன் பேட்டிங் செய்வார்கள்.இவர் தலைமையில் இந்திய அணி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் துரதிர்ஷ்டவசமாக இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரையில் அனைத்து விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டன் மகேந்திரசிங் தோனி தான் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். அவருடைய இந்த பெருமையை எளிதில் யாராலும் முறியடித்து விட முடியாது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து மகேந்திர சிங் தோனி திடீரென்று விலகியிருக்கின்றார் இதனை அணியின் நிர்வாகம் உறுதி படுத்தியது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்படவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வழங்கிய பேட்டியில் சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.மகேந்திர சிங் தோனியின் முடிவை நாங்கள் எப்போதும் மதித்து வருகின்றோம் .

அவர் எங்களுக்கு ஒரு தூணாக இருந்து வருகிறார். அவர் தொடர்ந்து அவ்வாறு இருப்பார் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைக்க இதுதான் சரியான நேரம் என அவர் உணர்ந்ததால் அதை செய்திருக்கிறார். இந்த முடிவை மேற்கொண்டது அவர்தான் என கூறியிருக்கிறார்..

அவருடைய இந்த முடிவு எங்களுக்கு எந்த விதமான ஆச்சர்யத்தையும் வழங்கவில்லை இதுகுறித்து நாங்கள் கடந்த வருடமே விவாதம் செய்தோம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் ஜடேஜாவை அவர் இந்த தொடரில் வழிநடத்துவார் ஒரு மூத்த வீரராக இருந்து வழி நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஐபிஎல் சீசனை பொருத்தவரையில் தோனியின் கடைசி சீசனாக இந்த ஐபிஎல் இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை தொடர்ந்து அவர் விளையாடுவார் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்திருக்கிறார் காசி விஸ்வநாதன்.