சாதி பெயரில் இருந்த குளங்களின் பெயரை மாற்றி அமைத்த முதல்வர் ஸ்டாலின்

0
150
CM Stalin changed ponds names which has caste name in Chennai

திமுக தலைவர் MK ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து பல அதிரடி திட்டங்களை நடத்தி வருகிறார்.

முதலமைச்சர் MK ஸ்டாலின் மிகவும் திறமையான முறையில் ஆட்சி புரிந்து வருகிறார் என்றே சொல்லலாம்.

முதலமைச்சர் முக ஸ்டாலின் குறிப்பிட்ட சாதியின் பெயரைக் கொண்டிருந்த 2 குளங்களுக்கு பெயரை மாற்றியுள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீளாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

அந்த கூட்டத்தில் தான் சாதிப்பெயர் கொண்ட குளங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி அம்பத்தூர் 82வது வார்டு மற்றும் சோழிங்கநல்லூர் 192வது வார்டில் ‘வண்ணாங்குளம்’ என்னும் பெயரில் குளங்கள் இருந்தன. அவை தற்போது வண்ணக்குளம் என பெயர் மாற்றப்பட்டுள்ளன.

இதுக்குறித்து சென்னை மாநகராட்சி கூறிய அறிக்கை ஒன்றில், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின் படி அம்பத்துரில் 82வது வார்டு சோழிங்கநல்லூர் 192வது வார்டில் ‘வண்ணாங்குளம்’ என்னும் பெயரில் உள்ள குளங்களின் பெயர்கள் வண்ணக்குளம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.

 

 

 

 

 

 

Previous articleதிடுக்கிடும் தகவல்! சின்னக்கலைவானராகிய விவேக்கின் மரணத்திற்கு இது தான் காரணமா?
Next articleதிமுக உடன் கூட்டணி அமைக்கும் தேமுதிக ?