முதலமைச்சர் இன்று முக்கிய ஆய்வு பயணம்.

Photo of author

By Sakthi

முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சிறப்பு விமானம் திருச்சி வருகை தருகின்றார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு தர இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதன் பின்னர் கார்மூலமாக தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு சென்று அங்கே கல்லணை கால்வாயில் நவீனப்படுத்தும் பணி மற்றும் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதை பார்வையிடும் முதலமைச்சர் இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை பகுதியில் தடையில்லாமல் செல்வதற்காக செய்யப்பட்டிருக்கும் முன்னேற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அதிகாரிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தை முடித்துக் கொண்டு மறுபடியும் திருச்சி வருகை தருகின்றார் முதலமைச்சர். திருச்சியை அடுத்த குழுமணி அருகே உய்யக்கொண்டான் கால்வாயில் இருந்து பிரிந்து செல்லும் வடிகால் கால்வாயின் தலைப்பு பகுதி புலிவளம் மணல் போக்கிலிருந்து சுமார் 280 கிலோ மீட்டர் தூரத்தில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்துவரும் தூர்வாரும் பணிகளையும் முதலமைச்சர் பார்வையிடுகிறார் என தெரிகிறது.

அதன் பின்னர் சுற்றுலா மாளிகையில் மதிய உணவை முடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் சிறப்பு விமானம் மூலமாக சேலத்திற்கு கிளம்புகிறார் முதலமைச்சர். இதன்காரணமாக, காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி இருக்கிறார்கள்.