குடிமகன்களே உஷார்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்!

Photo of author

By Sakthi

குடிமகன்களே உஷார்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்!

Sakthi

Updated on:

மிலாடி நபி திரு நாளை கொண்டாடவிருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இஸ்லாமிய மக்களுக்கு மிலாடி நபி வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார் இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில் இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த நாளை கொண்டாட இருக்கும் இஸ்லாமிய இன மக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் எனவும் உலகில் அமைதி சமாதானம் அன்பு சகோதரத்துவம் ஆகியவை பெருக வேண்டும் வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். என தெரிவித்திருக்கின்றார்.

கொரோனா தொற்று காரணமாக, பண்டிகை நாட்கள் எதுவும் உற்சாகமின்றி இருக்கும் நிலையில், இப்போது ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மிலாடி நபி திருநாள் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அதாவது நாளைய தினம் கொண்டாடப்பட இருப்பதை அடுத்து தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை மூடப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.