ஊரடங்கு விதிமுறைகளை மீறிய முதல்வர்! பொறுப்பற்ற ஆளுமை என விமர்சனம் செய்யும் மக்கள்!

0
168
CM violates curfew rules! People who criticize as irresponsible personality!
CM violates curfew rules! People who criticize as irresponsible personality!

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய முதல்வர்! பொறுப்பற்ற ஆளுமை என விமர்சனம் செய்யும் மக்கள்!

கொரோனா தொற்றின் காரணத்தினால் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு அமல் படுத்தியுள்ளனர்.அந்த வகையில் தற்பொழுது எடியூரப்பா கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.அவரையடுத்து பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்றார். இவர் பதவி ஏற்ற நாள் முதல் அவர் சொந்த ஊரான தார்வார் மாவட்டதிற்கு செல்லவில்லை.தற்பொழுது அங்குள்ள அவர் சொந்த ஊரான உப்பள்ளிக்கு சென்றார்.இவர் அங்கு சென்றடைய இரவு நேரம் ஆகிவிட்டது. அதனால் இவர் சொந்த ஊரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு பெற்று வந்தார். இவர் வந்ததை அறிந்த மக்கள் அவரை நேரில் பார்த்து மனு அளிக்க ஏராளமானோர் திரண்டனர்.

மக்கள் வந்ததை அறிந்த முதல்வர் மக்களை கண்டு மனுவை வாங்கிக் கொண்டிருந்தார். அவர் வாங்கும் பொழுது கூட்டம் அலை மோதியது.அதுமட்டுமின்றி நேரம் ஒன்பதரை மணி அளவில் இருந்தது. கர்நாடகாவில் தற்போது இரவு ஊரடங்கு நடைபெற்று வருவதால் ஒன்பது மணிக்கு மேல் யாரும் வெளியில் வரக்கூடாது என்று முதல்வர் ஊரடங்கு அமல் படுத்தினார். தற்பொழுது முதல்வரே ஒன்பதரை மணி வரை கூட்டம் கூடி விதிமுறையை மீறி உள்ளதாக பலர் விமர்சனங்கள் வைரலாகி வருகிறது.பிறகு இவர் 9.30 மணி ஆனதையடுத்து மக்களிடம் மனு வாங்குவதை விட்டுவிட்டு உடனடியாக காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.இவர் திடீரென்று சென்றதால் அங்குள்ளவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஊரடங்கு விதிமுறைகளை நீங்கள் இவ்வாறு மீறி விட்டீர்களே என பத்திரிகையாளர்கள் பலர் கேள்வி கேட்டனர்.அதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியது, நான் ஒன்பதரை மணி ஆகி இருப்பதை கவனிக்கவில்லை என்று பொறுப்பற்ற முறையில் பதில் அழைத்தார்.மேலும் தார்வார் மாவட்டம் வளர்ச்சிக்காக முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினேன்.ஆனந்த் சிங்கின் துறை ஒதுக்கீட்டு விவகாரத்தால் இவர்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். போன்ற ப்பதில்களை கூறி சரியான பதில் கூறாமல் அவர் வேறு ஏதோ காரணங்கள் கூறினார்.

ஒன்பதரை மணி ஆகியதை கவனிக்க வில்லை என்று பொறுப்பற்ற பதில் கூறியதால் இவரைப் பொறுப்பற்ற முதல்வர் என தற்பொழுது விமர்சித்து வருகின்றனர். முதல்வரை இவ்வாறு விதிமுறையை மீறினால் மக்கள் எவ்வாறு விதிமுறைகளை கடைப்பிடிப்பார்கள் என்றும் சமூக வலைதளங்களில் இவரது புகைப்படத்தை போட்டு விமர்சனம் செய்து வருகின்றனர். தொற்று பரவும் வகையில் ஏதேனும் கூட்டம் கூட பட்டால் அவர்கள் மீது வழக்கு போடப்படும். அந்த வகையில் இவர் மீது எந்தவித வழக்கும் இன்றுவரை தொடுக்கப்பட்டவில்லை.

Previous articleவிமானத்தில் பறந்து கொண்டிருந்தபோதே பிறந்த குழந்தை! ஆப்கன் பெண் பெற்றெடுத்தார்!
Next articleசீனாவை தொடர்ந்து இங்கும் ஆரம்பித்த இயற்கை பேரழிவு! பல பேர் மாயமான பரிதாபம்!