நுழையவே முடியாத இடத்தில் கால் வைக்கப் போகும் முதல்வர்! பரபரப்பானது மாநகரம் அது எந்த இடம் தெரியுமா!

Photo of author

By Sakthi

தென் மாவட்டங்களில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டபோது இதுவரை மூன்று முறை பயணத்தை ரத்து செய்து திடீர் திடீரென கிளம்பியிருக்கிறார் முதல்வர்.

ஆய்வு பயணத்தின்போது பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில், நான்காவது முறையாக தூத்துக்குடிக்கு ஆய்வை மேற்கொள்ள முதல்வர் செல்ல இருக்கின்றார். சென்டிமெண்டாகவே தூத்துக்குடி, நாகர்கோயில், பயணம் சரி வராத காரணத்தால் திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் சென்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை தொடங்க இருக்கிறார் முதல்வர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக எதிர்வரும் பத்தாம் தேதி மற்றும் 11ஆம் தேதி தென் மாவட்டங்களில் தமிழக முதல்வர் சுற்றுப் பயணத்தை தொடங்க இருக்கின்றார். கொரோனா தடுப்பு பணிகள் சம்பந்தமாக தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களுக்கு சென்ற மாதமே ஆய்வுப் பணி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனாலும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று பிரச்சனை போய்க்கொண்டு இருந்ததால் , இந்தத் திட்டம் சற்று ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் முதல் வாரம் இந்த மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்றிருந்த நிலையில், முதல்வரின் தாயார் மரணம் அடைந்ததால் ஆய்வுப்பணிகள் இரண்டாம் முறையாக ரத்து செய்யப்பட்டன.

கடந்த 29ஆம் தேதி தூத்துக்குடி செல்வதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கோரோனோவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததை அடுத்து, மூன்றாவது முறையாக அந்த ஆய்வு பணியை ரத்து செய்து இருந்தார்கள்.

இந்த நிலையில் நவம்பர் மாதம் பத்தாம் தேதி கன்னியாகுமரியிலும், பதினோராம் தேதி தூத்துக்குடி, விருதுநகர், மாவட்டங்களிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார், என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கொரோனா தடுப்பு பணி, மற்றும் மாவட்ட வளர்ச்சிப்பணிகள், சம்பந்தமாக மூன்று மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.