ரிஸ்க் எடுக்க வேணாம்ப்பா… கோப்ரா இயக்குனரிடம் மல்லுக்கட்டும் தயாரிப்பாளர்!
கோப்ரா திரைப்படம் ஆரம்பித்ததில் இருந்தே அதன் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் முட்டிக்கொண்டே இருக்கிறது.
சமீபத்தில் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள கோப்ரா சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பெற்றோர்களின் வழிகாட்டுதலோடு இந்த படத்தைப் பார்க்கலாம். அதே போல படம் 2 மணிநேரம் 55 நிமிடங்கள் ஓடும் என அறிவிக்கபட்டுள்ளது. தற்போதைய காலத்தில் 2.15 மணிக்குள் எடுக்கப்படும் படங்களையே ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்தவகையில் கோப்ரா சற்று நீளமான படமாகவே பார்க்கப்படுகிறது.
இதை உணர்ந்த தயாரிப்பாளர் படத்தை இன்னும் ட்ரிம் செய்ய சொல்லி இயக்குனரிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதை விரும்பாத இயக்குனர் அஜய் இதே நீளத்தோடுதான் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என வலியுறுத்தி வருகிறாராம். ஏற்கனவே இந்த ஆண்டு ரிலீஸ் ஆன வலிமை உள்ளிட்ட படங்கள் அதிக ரன்னிங் டைம் காரணமாக ட்ரோல் செய்யப்பட்டு பின்னர் திரையரங்குகளில் வெளியான சில நாட்களுக்கு பிறகு ட்ரிம் செய்யப்பட்டன. ஆனால் அப்படி செய்தால் அது எதிர்மறை விளைவுகளையே படத்தின் மேல் ஏற்படுத்தும்.
இந்த படம் ஆரம்பித்தது முதல் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் ஒத்துவரவில்லை. அதிக பட்ஜெட் மற்றும் அதிக நாட்கள் ஷூட்டிங் செய்து தயாரிப்பாளரை சிக்கலுக்கு ஆளாக்கினார் இயக்குனர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இப்போது ரிலீஸ் நேரத்திலும் மறுபடியும் பிரச்சனை தீர்ந்த பாடில்லாமல் இருவரும் முட்டிக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.