தேங்காய் நாரால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு! தொடர் குளறுபடிகள்…

Photo of author

By Rupa

தேங்காய் நாரால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு! தொடர் குளறுபடிகள்…

தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாத 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள்,கோட்டையை கைப்பற்ற போவது யார் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.வாக்கு பதிவு முடிந்த மறுநாளே திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை தொண்டர்களுக்கு வெளியிட்டார்.அதில் அவர் கூறியது,பெட்டிகள் மாற அதிக வாய்ப்புகள் உள்ளது..இனி தான் திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூறினார்.

அவர் கூறியதிற்கு இணங்கவே தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் குளறுபடிகள் நடந்த வண்ணமே தான் உள்ளது.அந்தவகையில் இன்று நாகை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் ட்ரோன் கேமரா சுற்றி வந்தது பெருமளவு பரபரப்பை ஏற்படுத்தியது.அதற்கடுத்து கோவையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு முன் பல மணி நேரமாக கண்டைனர் லாரிகள் சம்மதமே இல்லாதவகையில் நின்று கொண்டிருந்தது.அது அப்பகுதியிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைப்போலவே கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு கலைக்கலூரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திட்டக்குடி மற்றும் விருத்தாச்சலம் தொகுதிக்கான வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று மாலை கல்லூரிக்கு செல்லும் சாலையில் தனியார் பள்ளியின் முன்பு வெகு நேரமாக கண்டைனர் லாரி ஒன்று நின்றுக்கொண்டிருந்தது.இதனை அறிந்த அரசியல் கட்சியினர் அங்கு சூழ்ந்தனர்.தகவலறிந்த காவல் துறையினர் அங்கு விரைந்தது வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில்,திருப்பூரிலிருந்து சென்னைக்கு தேங்காய் நார் ஏற்றி சென்ற லாரி என்று,அந்த லாரி ஓட்டுனர் விருதாச்சலத்தை சேர்ந்தவர் என்பதால் வீட்டிற்கு செல்லும் முன் லாரியை நிறுத்து சென்றுள்ளார் என்பதும் தெரிய வந்தது.பின்பு காவல் துறையினர் அந்த ஓட்டுனரிடம் லாரியை வேறு இடத்தில் நிறுத்தும்படி அறிவுறுத்தி உள்ளார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.