கோடிங் எழுதும் ஏஐ!! ஐடி ஊழியர்களுக்கான எச்சரிக்கை மணி!! சுந்தர் பிச்சை

Photo of author

By Gayathri

நியூயார்க்கில் உள்ள கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் உலகம் முழுவதும் உள்ள சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு ஒரு எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி 25 சதவீத கூகிள் மென்பொருள் இப்போது AI ஆல் எழுதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூகுள் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை அவர்கள் இந்நிறுவனத்தின் இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற மூன்றாவது காலாண்டு பொதுகூட்டத்தின் போது இது குறித்து தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில், கூகுளின் புதிய மென்பொருள்கள், இயங்கு தளங்களில்.. 25 சதவீதத்திற்கும் அதிகமானவை இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டு பின்னர் மனித பொறியாளர்களால் ரிவ்யூ செய்யப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

இந்த ஏஐ தொழில்நுட்பத்தை பரிசோதிக்கும் வேலை மட்டுமே மனிதர்களுக்கு என்பதால் வேலை வாய்ப்பு குறையும் என்றும், மேலும் இதன் மூலம் வேலை வேகமாக நடக்கும் என்றும் பிழைகள் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இனிமேல் கோடிங் எழுதக்கூடியவர்கள் , டெஸ்டிங் செய்ய கூடியவர்கள் மற்றும் மென்பொருள் பொறியாளர்கள் AI-உருவாக்கிய குறியீட்டை மேற்பார்வையிடுதல், செம்மைப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றில் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.