இக்காலத்தில் சிறு குழந்தைகளுக்கும் நரைமுடி வருகிறது.இதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.இளம் வயதிலேயே நரைமுடி பாதிப்பை சந்திப்பதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
மேலும் தலைமுடி பராமரிப்பின்மையாலும் இளநரை வருகிறது.இதை கருமையாக மாற்ற கடைகளில் விற்கும் கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தி முடி உதிர்வு,சரும பிரச்சனைகளை சந்திப்பவர்கள் ஏராளம்.
தலையில் உள்ள நரை முடியை பக்கவிளைவுகள் இன்றி கருமையாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேர் பேக்கை ட்ரை பண்ணலாம்.
தேவைப்படும் பொருட்கள்:
1)காபி பவுடர் – இரண்டு தேக்கரண்டி
2)மருதாணி பொடி – அரை கப்
3)நெல்லிக்காய் பொடி – இரண்டு தேக்கரண்டி
4)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.தண்ணீர் சூடானதும் இரண்டு தேக்கரண்டி காபி பவுடர் சேர்த்து கொதிக்க வையுங்கள்.
பிறகு அடுப்பை அணைத்துவிட்டு காபி தண்ணீரில் அரை கப் மருதாணி பொடி மற்றும் இரண்டு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் பாதி எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து இரவு முழுவதும் ஊறவிடவும்.இந்த ஹேர் பேக்கை இரும்பு பாத்திரத்தில் தயாரிப்பது நல்லது.மறுநாள் காலையில் ஹேர் டை தயாராகி இருக்கும்.
பயன்படுத்தும் முறை:
இந்த இயற்கை ஹேர் டையை தலைமுடிகளின் வேர்காள்களில் படும்படி தடவி ஒரு மணி நேரத்திற்கு ஊறவிடுங்கள்.
பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.இப்படி இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் தலையில் உள்ள வெள்ளை முடி அடர் கருமையாக மாறிவிடும்.