மீண்டும் ஒளிபரப்பாகும் காபி வித் டிடி!! மாஸ் என்ட்ரி கொடுக்கும் தொகுப்பாளினி!! யார் கலந்து கொள்ள போறாங்க தெரியுமா??

Photo of author

By CineDesk

மீண்டும் ஒளிபரப்பாகும் காபி வித் டிடி!! மாஸ் என்ட்ரி கொடுக்கும் தொகுப்பாளினி!! யார் கலந்து கொள்ள போறாங்க தெரியுமா??

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் சில தமிழ் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.மேலும் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலை படித்தார். தற்போது எம் பில் படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். டிடி என்று இவரது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

திவ்யதர்ஷினி நகைச்சுவையான பேச்சால் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்புபவராக உள்ளார். இவர் தனது ஐந்தாம் வகுப்பு படிக்கும்பொழுதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சின்னத் திரைக்கு அறிமுகமானார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். மேலும் இவரின் முக்கிய நிகழ்ச்சியான காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனால் இவர் மேலும் பிரபலமானார். இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை ஜனவரி 2013 விகடன் வழங்கியது.

இவரை தற்போது அதிகமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. ஆனால் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் இணைந்து உள்ளார். இப்போது விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம். அது என்ன நிகழ்ச்சி என்றால் அவரின் அடையாள நிகழ்ச்சியான காபி வித் டிடி நிகழ்ச்சியையும் டிடி மீண்டும் தொகுத்து வழங்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலந்துகொள்ள உள்ளாராம். அவரின் நெற்றிக் கண் படத்தின் பிரமோஷனுக்காக அவர் கலந்து கொண்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த செய்தி விஜய் தொலைக்காட்சி நேயர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் டிடியின் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தில் உள்ளனர்.