கோவை முழு அடைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தெரிவித்த ஷாக் ரிப்போர்ட்! ஆக்சன் எடுக்குமா கட்சித் தலைமை?

Photo of author

By Sakthi

கோவை உக்கடம் பகுதியில் இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே சமீபத்தில் ஒரு கார் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தது திடீரென்று அந்த கார் பிடித்து சிதறியது இந்த சம்பவத்தில் அந்த காரில் இருந்த ஒரு நபர் உயிரிழந்தார் உயிரிழந்த அந்த நபர் தேசிய புலனாய்வு முகமையால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என சொல்லப்படுகிறது.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் சமீப காலமாக கோவையில் பாஜக மாபெரும் வளர்ச்சியை சந்தித்து வருகிறது. அதோடு சமீபத்தில் கோவையில் பாஜக அலுவலகம் மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.

அதோடு கோவை தெற்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினராக பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானொலி ஸ்ரீனிவாசன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் கோவையில் நாளை மறுநாள் முழு அடைப்பு நடத்தப்படும் என்று பாஜக அறிவித்தது. கோவையில் சிபி ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள்.

அந்த மாவட்டத்தில் பாஜக அழைப்பு விடுத்த முழு அடைப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர் கோவையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களை பாதிக்க கூடிய நூல் விலை உயர்வு உள்ளிட்டவைகளுக்கு பாஜக முழு அடைப்பு நடத்தியதா? இந்த முழு அடைப்பு தேவையில்லாதது என விமர்சனம் செய்திருந்தார்.

அவருடைய இந்த விமர்சனத்திற்கு பாஜகவின் சட்டசபை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் பதில் அளித்திருந்தார் 3000 காவல் துறையினரை குவிக்க வேண்டிய அளவுக்கு 40 சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்க வேண்டிய அளவுக்கு மாநில காவல் துறையால் விசாரிக்க இயலாமல் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டிய அளவிற்கு நிலைமை மோசமானதால் தான் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் இந்த முழு அடைப்பு போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தான் அமைச்சர் கோவைக்கு வந்திருக்கிறார் என்பது அவருடைய பேட்டியில் இருந்து தெளிவாக புரிகிறது. முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று வணிகர்கள், தொழில்துறையினரை அமைச்சர் மிரட்டி வருவதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. முழு அடைப்பு போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. முழு அடைப்பு போராட்டம் என்பது ஜனநாயக வழியிலான அறப் போராட்டம் அமைச்சரின் மிரட்டலுக்கு பாஜக ஒருபோதும் பயப்படாது. இந்த மிரட்டல் அரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். திமுக ஆட்சியில் தான் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

சிறுபான்மையின வாக்கு வங்கிகாக பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறையை பின்பற்றக் கூடாது. இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதை பாஜகவின் கோரிக்கை அதனை வலியுறுத்தவே அக்டோபர் மாதம் 31ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான் கோவை மாநகரில் பாஜக முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிலதிபர் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கை நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரதசக்கரவர்த்தி உள்ளிட்டோர் விசாரித்தனர். இந்த விசாரணையின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில் கோவை முழு அடைப்பு என்பது மாநில தலைமையால் அறிவிக்கப்படவில்லை. மாநில தலைமை இதற்கு ஒப்புதலும் வழங்கவில்லை.

கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் தன்னிச்சையாக அறிவித்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. இது மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது. அண்ணாமலையின் இந்த பதிலை தொடர்ந்து கோவையில் நாளை மறுநாள் முழு அடைப்பு போராட்டம் நடந்தால் தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதில் மற்றொரு சாராம்சம் இருக்கிறது அது என்னவென்றால் கோவையில் வானதி சீனிவாசன் தனி பெரும் தலைவராக வளர்ந்து விடக்கூடாது என்று கட்சியின் தலைமை நினைப்பதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக தான் பாஜக சட்டமன்ற குழு தலைவராக நைனார் நாகேந்திரனை கட்சி தலைமை நியமனம் செய்ததாகவும் முன்பே தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த விவகாரத்தில் அண்ணாமலைக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றே கருதப்படுகிறது. இந்த முடிவு முழுக்க முழுக்க தேசிய தலைமையால் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆகவே வானதி ஸ்ரீனிவாசனை சமாதானம் செய்யும் நோக்கத்திலேயே அவருக்கு தேசிய மகளிர் தலைவர் பதவி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தெரிவித்து இருந்த கருத்துக்கு பாஜகவுக்குள் மிகப்பெரிய புகைச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பாஜகவை பொறுத்தவரையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பை முக்கிய அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. ஆனால் பாஜக தலைவர்கள் ஆளுக்கு ஒரு திசையில் முடிவெடுத்து செயல்படுவதையே அண்ணாமலை தரப்பின் விளக்கம் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. இதனால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை தரப்பு தெரிவித்ததன் அடிப்படையில் பாஜக தலைமையின் ஒப்புதல் பெறாமல் சர்ச்சைக்குரிய முழு அடைப்புக்கு கோவை மாவட்ட பாஜக நிர்வாகம் அழைப்பு விடுத்திருக்கிறது.

அப்படி என்றால் முழு அடைப்பு விவகாரத்தில் அழைப்பு விடுத்த சிபி ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டவர் மீது கட்சியின் மேலிடம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்பது அரசியல் பார்வையாளர்களின் கேள்வியாக இருக்கிறது.

பாஜகவில் நிலவிவரும் யார் பெரியவர் என்ற மோதலில் வெளிப்பாடு தான் கோவை முழு அடைப்பு விவகாரத்தில் ஆளுக்கு ஒரு நிலைப்பாடு எடுத்திருப்பது என்பதையும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.