மாநில அளவில் நடந்த கூடைப்பந்தாட்ட போட்டியில் கோயம்புத்தூர் அணி முதலிடம் 

0
188
Coimbatore team topped the state level basketball tournament
Coimbatore team topped the state level basketball tournament

மாநில அளவில் நடந்த கூடைப்பந்தாட்ட போட்டியில் கோயம்புத்தூர் அணி முதலிடம்

மாநில அளவில் இரவு பகலாக கும்பகோணத்தில் நடந்த கூடைப்பந்தாட்ட போட்டியில் கோயம்புத்தூர் அணி முதலிடத்தை பிடித்தது.

குடந்தை டெம்பிள் சிட்டி கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் கும்பகோணத்தில் மூன்று நாட்கள் நடந்த மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டி பகல் இரவாக நடைபெற்றது.இந்த போட்டியில்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 அணிகள் கலந்து கொண்டன.

மின்னொளியில் விடிய விடிய நடைபெற்ற இறுதி போட்டியில் கோயம்புத்தூர் அணி முதலிடத்தை பிடித்தது.

இரண்டாமிடத்தை அறந்தாங்கி அணியும், மூன்றாம் இடத்தை மேட்டூர் அணியும், நான்காம் இடத்தை சென்னை அணியும் பிடித்தது.

இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கும்பகோணம் மாநகர துணை மேயர் சுப தமிழழகன் நினைவுப் பரிசுகளையும், ரொக்க பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்.

இந்த போட்டிகளை அப்பகுதியிலுள்ள ஏராளமான பொதுமக்களும்,இளைஞர்களும் விடிய. விடிய அமர்ந்து உற்சாகமாக கண்டுகளித்தனர்.

Previous articleகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் பள்ளி மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!
Next articleகொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு