மழை காலங்களில் ஏற்படும் சளி, இருமல்!! அதை சரிசெய்ய இந்த பொருட்கள் போதும்!!

0
601
Cold and cough during rainy season!! These ingredients are enough to fix it!!
Cold and cough during rainy season!! These ingredients are enough to fix it!!

மழை காலங்களில் ஏற்படும் சளி, இருமல்!! அதை சரிசெய்ய இந்த பொருட்கள் போதும்!!

மழை காலங்களில் நமக்கு ஏற்படும் சளி, இருமல் போன்ற தொல்லைகளை சரி செய்வதற்கு ஒரு சில பொருட்கள் வைத்து எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது பற்றி. தெரிந்து கொள்ளலாம்.

வெயில் காலத்தில் சளி, இருமல் ஏற்படுவதை விட மழை காலத்தில் அனைவருக்கும் மிக எளிதாக பிடிக்கும். இந்த சளி, இருமல் தொற்று ஏற்பட்டால் நமக்கு மட்டுமில்லாமல் நம்மை சுற்றி இருக்கும் நபர்களுக்கும் தொந்தரவு தான்.

சளி, இருமல் வந்துவிட்டால் மூச்சுத் திணறல், மூக்கடைப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.  இந்த சளி, இருமல் பிரச்சனையை குணப்படுத்த அருமையான மருந்தை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

சளி, இருமல் குணப்படுத்தும் மருந்தை தயாரிக்க தேவையான பொருட்கள்…

* வெற்றிலை – 1

* ஏலக்காய் – 1

* மிளகு – 5

* கிராம்பு – 1

* தேன் – 1 ஸ்பூன்

தயார் செய்யும் முறை:

ஒரு வெற்றிலை எடுத்து அதன் வால் மற்றும் காம்பு பகுதியை மட்டும் நீக்கிவிட வேண்டும். பின்னர் வெற்றிலையின் நடுவே ஏலக்காய், மிளகு, கிராம்பு இவை அனைத்தையும் வைக்க வேண்டும்.பின்னர் இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக இதை பீடா போல மடித்து வாயில் போட்டு மெல்ல வேண்டும்.மென்று சாப்பிடும் பொழுது முதலில் இனிப்புச் சுவை ஏற்படும்.இறுதியாகத் தான் அதன் காரத்தன்மை வெளிப்படும்.இதை ஒரு. நாளுக்கு ஒரு முறை என்று தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குணமாகும்.

Previous articleஇந்த 2 டிப்ஸை பாலோ பண்ணுங்க!! உங்க முகத்தில் மங்கு என்ற பேச்சுக்கே இடமிருக்காது!!
Next articleமுகம் அழகாகவும் பொலிவாகவும் இருக்க இந்த 3 பொருட்களை பயன்படுத்துங்கள் போதும்!! ஒரே வாரத்தில் தீர்வு கிடைக்கும்!!