2 நிமிடங்களில் தொண்டை சளி கரைய.. இந்த மூலிகை வைத்தியங்கள் கைகொடுக்கும்!!

Photo of author

By Divya

2 நிமிடங்களில் தொண்டை சளி கரைய.. இந்த மூலிகை வைத்தியங்கள் கைகொடுக்கும்!!

மழைக்காலம்,பருவநிலை போன்றவற்றின் விளைவினால் சளி,இருமல்,தொண்டை வலி,காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களே இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

வைரஸ் தொற்று மூலம் பரவக் கூடிய இதுபோன்ற நோய்களில் இருந்து சிலர் எளிதில் குணமாகி விடுவர்.சிலருக்கு உடனடி நிவாரணம் கிடைக்காமல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.அதிலும் சளி பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அவை மூச்சு விடுதலில் சிரமம்,சுவை உணர்வு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்.உடலில் மூக்கு மற்றும் மார்பு மற்றும் தொண்டை உள்ளிட்ட பகுதிகளில் சளி அதிகளவு உருவாகிறது.

அதிலும் தொண்டை பகுதியில் உருவாகும் சளியால் தொண்டை வலி,தொண்டைப்புண்,எரிச்சல்,கரகரப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.எனவே தொண்டை பகுதியில் தேங்கி கிடக்கும் சளியை எந்தவித சிரமும் இன்றி கரைக்க இந்த எளிய வைத்தியங்களை செய்து வரலாம்.

1)ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சிட்டிகை அளவு மஞ்சள் மற்றும் 1/4 தேக்கரண்டிக்கும் குறைவாக கல் உப்பு சேர்த்து கலக்கி வாயை கொப்பளித்து வந்தால் தொண்டை சளி முழுமையாக வெளியேறும்.

2)ஒரு கிளாஸ் சூடான நீரில் 1/2 தேக்கரண்டி பட்டைத்தூள் சேர்த்து அருந்தினால் தொண்டையில் உள்ள சளி அடியோடு கரைந்துவிடும்.

3)ஒரு கப் நீரில் ஒரு துண்டு இஞ்சியை இடித்து போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் தொண்டை சளி,கரகரப்பு,தொண்டை வலி ஆகிய பாதிப்புகள் குணமாகும்.