இரண்டு நாட்களில் இவ்வளவு கோடி வசூலா!!? குஷி திரைப்படத்தின் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்!!!

Photo of author

By Sakthi

இரண்டு நாட்களில் இவ்வளவு கோடி வசூலா!!? குஷி திரைப்படத்தின் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்!!!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் இரண்டு நாட்களில் செய்த வசூல் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தேவரகெண்டா கதாநாயகனாக நடிக்க இயக்குநர் ஷிவ நிர்வனா இயக்கத்தில் குஷி திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார்.

குஷி திரைப்படத்திற்கு ஹெசம் அப்துல் வாஹப் இசையமைத்துள்ளார். பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான மைதிரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் குஷி திரைப்படத்தை தயாரித்துள்ளது. செப்டம்பர் இரண்டாம் தேதி வெளியான குஷி திரைப்படம் தெலுங்கு மொழியில் நல்ல வரவேற்பும் நல்ல விமர்சனங்களும் பெற்று வருகின்றது.

தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான குஷி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி செப்டம்பர் 1ம் தேதி வெளியான குஷி திரைப்படம் இரண்டு நாட்களில் 51 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக குஷி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.