தமிழகம் முழுவதும் தங்கள் வீட்டு வாசலிலேயே மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டுப் பிரார்த்தனை!! எதற்கு தெரியுமா??

Photo of author

By Parthipan K

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டி உலகம் முழுவதும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நோய் தோற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் உடல் நிலையில் கடந்த சில நாட்களாக சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு எக்மோ கருவியின் மூலம் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அவர் குணமடைய வேண்டி நேற்று மாலை கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. அதில் மணிமுதல் 6-6.5 வரை எஸ் பி பி யின் பாடலை ஒலிக்கவிட்டும், இரண்டு நிமிடங்கள் மௌன பிரார்த்தனைகளை செய்தும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் தமிழ் திரைத்துறையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள எஸ்பிபியின் ரசிகர்கள் கலந்து கொண்டனர். சாலைகளிலும் வீட்டின் வாசலிலும் நின்று ரசிகர்கள் மௌனப் பிரார்த்தனை செய்தனர். எஸ்பிபி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வெளியே சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்றனர்.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ரசிகர்கள் தங்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் அவரின் படத்தை வைத்துக்கொண்டும் இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.இயக்குனர் பாரதிராஜா, நடிகர் சரோஜாதேவி, பார்த்திபன், இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் அதில் பங்கேற்றனர். மேலும் இணைய வழியில் நடைபெற்ற பிரார்த்தனையில் அவர்கள் எஸ்பிபி உடன் தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ட்விட்டர் பக்கத்தில் மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ்.பி.பி விரைவில் நலம் பெற பெறவும் நல்ல ஆரோக்கியம் பெறவும் பிரார்த்திப்பதாக” அதில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலருடைய பிரார்த்தனைகள் ஒன்றுசேர்ந்து எஸ்பிபி பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.