கல்லூரி விடுமுறை குறித்து புதிய தகவல்!! கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு!!

0
233
கல்லூரி திறப்பு? கல்வி இயக்குநர் அறிவிப்பு
கல்லூரி திறப்பு? கல்வி இயக்குநர் அறிவிப்பு

கல்லூரி விடுமுறை குறித்து புதிய தகவல்!! கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு!!

செமஸ்டர் தேர்வு முடிந்து கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தாலும், கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.

பள்ளிகளில் நேற்றுடன் (ஏப்ரல் 28) வேலை இறுதி நாட்கள் முடிவடைந்து, இன்று முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை  உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதியும் 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்.

அது போல்  கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 19 ஆம் தேதி கல்லூரி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  பல்கலைக்கழகம் நிர்ணயித்த வேலை நாட்களை அந்தந்த கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கல்லூரியின் இறுதி நாளை முடிவு செய்து கொள்ளலாம்.

கோடை வெயிலின் காரணமாக பள்ளி திறப்பு தள்ளி போவதற்கு வாய்ப்பு உள்ளதா  என கேட்ட போது, அந்த சூழ்நிலையில் முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

Previous articleசுருக்குமடிவலை விவகாரம்! மீன்பிடிக்க அனுமதி கோரிய மீனவர்களின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்! 
Next articleமெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி!!